பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்பு நூலகங்கள் 1 1 7 தனது சிறப்பு நூலகரிடம் ஒரு குறிப்பிட்ட தகவலைக் கேட் கும் பொழுது, அந்தத் தகவல் கிடைக்கவில்லே' என்று அவர் சொல்ல முடியாது; சொல்லவும் கூடாது. ஏனென் முல். அந்தக் தகவலை எப்படியும் கண்டு பிடித்து அல்லது தேடிக் கொடுக்க வேண்டியது சிறப்பு நூலகர்களின் கடமை யாகும். எனவே, அதை அவர் எவ்வகையிலும் கண்டு பிடித்தேயாக வேண்டும். உண்மையில் அதற்காக அவர் அரும்பாடுபடுகிருர், வாணிக, தொழில் துறையில் சிறப்பு நூலகராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைப்பது, ஒரு வருக்கு கிடைத்தற்கரிய ஒரு பெரும்பேறு எனலாம். இதைப் போல், பொருளும் புகழும் தேடித்தரும் தொழில் வேறு இல்லை என்று சொல்லலாம். இத்தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கிறது: பயனுள்ள முறையில் உழைப்ப தம்கும், பெரிய மனிதர்களுடன் தொடர்பு கொள்வதற் கும் வாய்ப்புக் கிடைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பணியில் தாமும் முக் கிய பங்கு கொள் கிருேம் என்ற ஆன்மீக நிறைவும் ஏற்படு கிறது. மருத்துவம், மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருள்கள் பற்றிய நூல்களைச் சேகரிப்பதில் மருத்துவ நூலகங்கள் கவனம் செலுத்துகின்றன. நோயின் வரலாறு, நொய் நாடல் முறைகள், நோய் தீர்க்கும் வழிகள், பல் வேறு நாடுகளில் நோய்களை ஒழிக்க நடந்து வரும் முயற்சி கள் ஆகியவை பற்றிய நூல்கள், பத்திரிகைகள், துண்டு வெளியீடுகள், ஆராய்ச்சி அறிக்கைகள் முதலியன இந் பாலகங்களில் இடம் பெறுகின்றன. மருத்துவ ஆராய்ச்சி களில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களும், புதிய முறை அரும், தனிவரைவு நூல்களிலும் (Monograph) பத்திரி கைகளிலும் முதலில் வெளியிடப்படுகின்றன. பிறகு அவை மால் வடிவம் பெறுகின்றன. மருத்துவத் துறையில் படும் ஒவ்வொரு முன்னேற்றமும், மருத்துவம் பற்றிய முயக்கியங்களில் பல்லாயிரம் பக்கங்களைச் சேர்க்கின்றன.