பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. தலைசிறந்த நூலகங்கள் 1 யுேயார்க் பொது நூலகம் உலகிலுள்ள மாபெரும் நிறுவனங்கள் அனைத்தும் முதலில் தோன்றிய இடம் மனிதனின் உள்ளமே. உள்ளத் இல் உதயமாகிய பின்னரே அவை நடைமுறையில் முழு உருவம் பெறுகின்றன. எனினும், நீண்டகாலமாக இருந்து வரும் மாபெரும் நிறுவனங்களை ஏதோ தற்செயலாகத் தோன்றியவை' என எண் ணுவதே மனித இயல்பாக இருந்துவருகிறது. மனிதன் தனது அறிவாலும், அயராத உழைப்பாலும் அரும்பாடு பட்டு உருவாக்கியவைதான் இந்நிறுவனங்கள் என்ற எண்ணம் இவற்றைப் பார்த்த மாத்திரத்தில் யாருக்குமே உடனடியாக ஏற்படுவதில்லை. மணி கணின் சாதனைக்கு ஒர் எடுத்துக் காட்டாக-பார்ப் போரை மலைக்க வைக்கும் மாபெரும் நிறுவனங்களில் ஒன் ருக நியுயார்க் பொது நூலகம்’ (The New York Public Library) இலங்குகின்றது. நியுயார்க் நகரின் நடு நாயகமான ஐந்தாவது அவனியூ (Fifth Avenue) பகுதியில், 'அம்மா பெரிது' என வியக்கும் வண்ணம் அமைந்துள்ள தலமைக் கட்டிடத்தின் (Central Building) எழிலார்ந்த தோற்றம்: அங்கு வரிசை வரிசையாக நிற்கும் அலமாரி களில் அடுக்கடுக்காய் அழகுற அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இலட்சக்கணக்கான நூல்கள்: தெற்கில் ஸ்டேடன் தீவின் (Mturn Island) தென் முனை முதல் வடக்கில் மேல் பிராங்க (Upper Bronx) வரையிலும் நீண்டு விரிந்து கிடக்கும் நியு