பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் யார்க் மாநகர் முழுவதிலும் இயங்கி வரும் 80-க்கும் அதிக மான கிளை நூலகங்கள்-இவை அனைத்தையும் காணும் பொழுது. இவையெல்லாம் தனிப்பட்ட மனிதனின் கற். பனையில் தோன்றி அவனது உழைப்பினுல் உருவம் பெற் றவை என்பதை நம்புவது முதலில் சற்றுக் கடினமாகத் தான் தோன்றுகிறது. எனினும், மனிதன் கண்ட கனவும், அதை நனவாக்க அவன் மேற்கொண்ட மன உறுதியும், எடுத்த அரும் முயற்சிகளும் இந் நூலகம் பிறக்கக் காரணமாகவும். அதன் வளர்ச்சிக்கு ஒவ்வொரு கட்டத்திலும் உறுதுணையாகவும் அமைந்திருந்தன என்பது மறக்க முடியாத உண்மை. எனவேதான், இந்நூலகத்தை உருவாக்கிய வீரர்கள். நூல் வரலாற்றில் (History of books) மட்டு மின்றி, நாட்டின் வரலாற்றிலும் அழியாத இடம் பெற்று விட்டார்கள் பாமர மக்களுக்குத் தொண்டு புரிவதில் இந்த வீரர்கள் காட்டிய பேரார்வமும் பொதுநலப் பணிகளுக்காக வாரி வாரி வழங்கிய அவர்களது வள்ளன்மையும், தாம் தீட்டிய திட்டங்களைச் செயலாக்குவதில் அவர்கள் காட்டிய அள வற்ற பொறுமையும், மேற்கொண்ட அளப்பரிய முயற்சி களும் நியுயார்க் மாநகரின் வரலாற்றில் முக்கிய இடம் பெற்று வினங்குகின்றன. நியுயார்க் பொது நூலகத்தின் வரலாற்றை ஒரு நாடகமாகக் கொண்டால், அதில் வரும் முதல் கதா நாயகன் ஜான் ஜேகப் ஆஸ்டர் (John Jacob Astor) என லாம். வேற்று நாட்டிலிருந்து திக்கற்ற சிறுவனுக. வயிற் றுப் பிழைப்புக்கு வழி தேடி அமெரிக்கா வந்து சேர்ந்த ஆஸ்டர், நியுயார்க் நகரில் அடைக்கலம் புகுந்தார். பல தொழில்களைச் செய்து சிறுகச் சிறுகப் பொருள் தேடிய அவர் கம்பளி வணிகம், கப்பல் வணிகம், தேயிலை வணிகம் ஆகியவற்றில் ஈடுபட்டு பெரும் பொருள் குவித்தார். நகரில் பெரும் பணக்காரரானர். பல வழிகளிலும் வந்து குவியும்