பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் அமெரிக்க நூலகவியல் அறிஞர்கள் எழுதிய நூல்கள், கட்டுரைகள் ஆராய்ச்சிகள் முதலானவற்றைப் படித் தறியும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இவைகளையெல் லாம் அமெரிக்கத் தகவல் நிலையத்தார் அன்புடன் வழங்கிய துடன் சில நல்ல புகைப் படங்களையும் நூலில் வெளியிடு வதற்காகக் கொடுத்து உதவிஞர்கள். இந்த நூல் எழுதுவதற்கு நான் மேற்கொண்ட பெரும் முயற்சிகளைக் கவனித்து வந்த என் தந்தையார் ஒருநாள் சிரித்துக்கொண்டே அமெரிக்காவைப் பார்க்காமல் அமெ ரிக்க நூலகங்களைப் பற்றி நூல் எழுத இத்தனை பாடுபடு கிருய்! அமெரிக்கா சென்று நூலகங்களையும் அவற்றின் செயல் முறைகளையும் நேரில் காணும் பேறு உனக்குக் கிட்டும்! அப்படி அருள் பாவிக்க ஆண்டவனே வேண்டு கிறேன்' என்று சொன்னர்கள். பிறகு 1960-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழக நூலகவியல் துறைக்குப் பணிபுரிய வந்தேன். என்மீது அள விலா அன்பும், என் நலனில் நாட்டமும் கொண்டவரும் நூலகவியல்துறைத் தலைவருமாகிய பேராசிரியர் டாக்டர் டி. பி. கிருஷ்ணுராவ் அவர்கள், நீங்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும்: நூலகவியல் பற்றிய அறிவை மேலும் வளர்த்துக் கொள்ளவேண்டும்' என்று அடிக்கடி கூறி எனக்கு ஊக்கமளித்து வந்தார்கள். வெளிநாடு செல்வது நம் கையிலா இருக்கிறது? எல் லாம் இறைவன் செயல். ஆண்டவன் அருளிருந்தால் எல்லா வாய்ப்பும் வந்து கைகூடும்' என்ற நம்பிக்கை யுடனிருந்தேன். இருந்தாலும் அமெரிக்கா செல்வதற்கு எனக்கு இவ்வளவு விரைவில் வாய்ப்புக் கிட்டும் என நான் கனவிலும் கருதவில்லை. அமெரிக்கா வரும்படி அழைப்பு விடுத்து அந்நாட்டு அரசாங்கத்தின் சார்பில் தில்லியி லுள்ள அமெரிக்கத் தூதர் செஸ்டர் பெளல்ஸ் (Chester Bowles) அவர்களிடமிருந்து எனக்குத் திடீரென ஒருநாள்