பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகலசிறந்த நூலகங்கள் _ 177 _ ஆண்டறிக்கை இடம் பெறும்). நூலாசிரியர் பெயர் தெரியாவிட்டால் நூலின் பெயர் வரிசையைப் பார்க்க லாம். ஒரு நூல் எந்தப் பொருளைப் பற்றியது என்பது மட்டும்தான் தெரியுமெனில் அல்லது ஒரு பொருள் பற்றி ஏதாவது ஒரு நூல் வேண்டுமெனில் அந்தக் குறிப்பிட்ட பொருள் தலைப்பின்கீழ் நூலைத் தேடலாம். சிலர் விலைகள்' பற்றிய நூல்கள் மட்டும் அறிய விரும்பலாம். அவர்கள் பொருளாதாரம் என்ற விரிவான பொருள் வரிசையில் அதைப் பார்க்காமல், விலைகள்' என்ற தலைப்பில் பார்க்க வேண்டும். நூலைக் கேட்பது எப்படி ? பொதுப் படிப்பறைகளிலிருந்து படிப்பதற்கு, நூலகத் தின் இரண்டு கட்டிடங்களிலுமுள்ள அலமாரிகளிலிருந்து நூல்களை எடுக்க விரும்பும் வாசகர்கள் என்ன செய்ய வேண்டும்? நூலக நூற்பட்டியைப் பார்த்து நூலின் வரிசை எண்ணைக் குறித்துக்கொள்ள வேண்டும். 2. நூல் கோரிக்கைச் சீட்டில் (Call Slip), நூலின் வரிசை எண், நூலின் பெயர் குறிப்பிடவேண்டும் 3. படிப்பறையில் தான் உட்காரப் போகும் இடத்திலுள்ள நாற்காலி-மேசை பின் எண்ணையும் இந்தச் சீட்டில் குறிக்க வேண்டும். 4 பின் இச்சீட்டை நூல் வழங்கும் மேசை (Issue Desk) யிலுள்ள அலுவலரிடம் கொடுக்க வேண்டும். ஒருங்கிணைத்துத் தைக்கப்பட்ட பருவ வெளியீடுகளின் (நாளிதழ்கள் தவிர) தொகுதிகள் பொதுப் பகுப்பு வரிசை ago (General Classified Collections) @@38.*.*.spor. இந்தத் தொகுதிகள் வேண்டுமெனில், கோரிக்கைச் சீட்டில் நூலாசிரியர் பெயரைக் குறிப்பிடத் தேவையில்லே. தொகுதியின் தலைப்பு, தொகுதி எண், வரிசை எண், தேதி முதலிய னவற்றைக் குறிப்பிடுதல் வேண்டும். ஒருங்கிணைத் துத் தைக் கப்படாத (Unbounded) பருவ வெளியீடுகள், நூ-12