பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் அரசாங்க அறிக்கைகள், நாளிதழ்கள் ஆகியவற்றை இவற் றுக்கான தனிப் படிப்பறைகளில் கண்டு கொள்ளலாம். நூலக நூற்பட்டிகளைப் பயன்படுத்தவும். மற்ற நூல் விவரத் தொகுதிகளைக் கையாளவும், எளிதில் கண்டுபிடிக் காத நூல்களைக் கண்டுபிடிக்கவும் வாசகர்களுக்கு உதவி புரிவதற்காகப் பொதுப் படிப்பறைகளிலும், தனிப் படிப் பறைகளிலும் அலுவலர்கள் உள்ளனர். இவர்கள். வாசகர் களுக்கு அவ்வப்போது வேண்டிய உதவிகளைச் செய் கிரு.ர்கள். கோரிக்கைச் சீட்டை முறையாக எழுதி, நூல் வழங்கு மேசை அலுவலரிடம் கொடுத்துவிட்டு. வாசகர் இரு கட்டி டங்களிலுமுள்ள ஏதாவது ஒருபடிப்பறையில்போய் அமர்ந்து கொள்ளலாம். கேட்ட நூல் இருக்குமெனில், அரைமணி நேரத்திற்குள், அலுவலர் ஒருவர் அதைக் கண்டுபிடித்து எடுத்து வாசகரிடம் கொண்டு வந்து கொடுக்கிரு.ர். அரை மணிக்கு மேல் தாமதமாக மால்ை. நூல் வழங்கு மேசை அலுவலரிடம் போய் விசாரிக்க வேண்டும். அவர், தாமதத் திற்கான காரணத்தை அறிந்து விளக்குவார். கேட்ட நூல் கிடைக்கவில்லை என்ரு ல், நூல் கிடைக் கப் பெருததற்கான காரணத்தைச் சீட்டின் பின் புறத்தில் எழுதி வாசகரிடம் சீட்டைத் திருப்பிக் கொடுக் கிருர்கள். நூல் கிடைக்கவில்லை என்பது தவருண தகவலாக இருக்கு மென நூல் வழங்கு அலுவலர் கருதினுல். மீண்டும் நூலைத் தேடும்படி உரிய அலுவலர்களுக்கு ஆணையிடுகிரு.ர். மறு படியும் தேடிய பிறகு, ஒரு நூலை வேருெரு வாசகர் எடுத்துச் சென்றிருப்பதாகத் தெரிந்தால், அந்நூல் எப்பொழுது திரும்பிவரும் என்பதை வாசகருக்குத் தெரிவிக்கிரு.ர்கள். துல் திரும்பி வந்தவுடன் அந்த வாசகருக்கு அஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். அப்படித் தெரிவித்த 10 நாட் களுக்குள் வாசகர் அந்த நூலை வாங்கிச் செல்லலாம். ஒரு வாசகர் ஒரு நூல் ப் படித்து முடித்த பின்னர் அல் லது படிப்பறையிலிருந்து வெளியே செல்லும்போது, தான்