பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்நூலகப் பள்ளிகள் அமைந்திருப்பதே இந்த வேறுபாட்டுக்குக் காரணம். பாடத்திட்டங்களிலும், பாடங் கற்பிப்பதிலும் வேறுபாடு இருந்தபோதிலும், நூலகப் பணிக்கான சிறந்த பயிற்சியை வழங்குவதே இப்பள்ளிகளின் பொதுவான நோக்கமாக இருந்து வருகிறது. நூலகப் பள்ளிகளில் பல வகுப்புகள், பலவிதமாக நடத்தப்படுகின்றன. அதே சமயத்தில், ஒரு குறிப்பிட்ட துறையில் சிறப்பாகப் பயிற்சி பெறுவதற்கும் பெரும் அன வில் வாய்ப்பளிக்கப்படுகிறது. நூலகவியலின் தந்தை எனக் கருதப்படும் மெல்வில் டுவியின் (Melvi Dewey) காலத்திலிருந்து நூலகவியலின் பாடத்திட்டம் சீரான முறையில் வளர்ந்து வந்திருக்கிறது. தொடக்கத் தில், சில குறிப்பிட்ட எளிய அலுவல்களில் பயிற்சியளிப்பதுதான் பயிற்சியின் நோக்கமாக இருந்தது. இன்று, ஏராளமான தொழிற் துறைகளில் தனிப்பயிற்சியளிக்கும் வகையில் பாடத் திட்டம் விரிவடைந்திருக்கிறது. சிறப்புத் துறைகள் பல வாகப் பெருகியிருப்பதால், நூலகர்களின் தன் மையும் அந்தந்தத் துறைகளுக்கு ஏற்றவாறு மாறுபட்டிருக் கின்றது. நூலகவியல் கல்வியானது இன்று சில எளிய நுட் பங்களில் பயிற்சி பெறுவதுடன் நின்று விடவில்லை. பல திறமைகளின் கூட்டுச் சேர்க்கையாக அமைந்துள்ளது. நூல்கள் மட்டுமின்றி பல்வேறு சாதனங்களும் நூலகத்தின் உறுப்புக்களாக இருந்துவருவதால், அவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து சீரான முறையில் இயக்கி நூலகப்பணி திற மையாக நடைபெறச் செய்யவேண்டியது இன்றைய நூல கர்களின் பொறுப்பாக இருக்கிறது. புதிய செய்திகளேயும், தகவல்களையும் மக்களுக்கு அறிவிக்கும் கருவியாக நூலகங் கள் இன்று பணியாற்றி வருவதால், சமூகத்தில் ஒழுக்க நெறியை உருவாக்கும் ஓர் இன்றியமையாத சாதனமாக வும் நூலகவியல் இன்று ஆகியிருக்கிறது.