பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சிறப்புக்கள் I9 of ஒருங்கிணைப்பு நூலகத்தின் பல்வேறு பணிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் கடந்த பல்லாண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் இந்த ஒருங்கிணைப்பு முடியவில்லே என்றே சொல்ல வேண்டும். நூலகத்திலுள்ள நூல்களையும், பிற சாதனங்களையும் எப்படிப் பயன்படுத்துவது?' என்ற சிக்கலுக்கே அதிகமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரு கிறது. அவற்றை எப்படி அமைப்பது?’ என்ற சிக்கலுக் குக் குறைந்த முக்கியத்துவமே அளிக்கப்படுகிறது. பழைய கருவிகளையும், நூலகமுறைகளையும் மாற்றியமைப்பதில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை. எனினும், இத் துறையில் சில புதிய, குறிப்பிடத்தக்க மாறுதல் ஏற்பட்டு வருகின்றது. பொருள் வாரி நூல் விவரத் தொகுதி இயல் (Subject Bibliography) u bili sa sa si 33 u“ s stiš தந்த ஆராய்ச்சித் துறைகளுடன் இனத்திருக்கிருர்கள். நூல் விவரத் தொகுதி இயல் கற்பிப்பதிலும், நூலக வயிற் சியிலும் ஆராய்ச்சி தொடர்பான சிக்கல்கள் பலதரப்பட் டவை என்பதும், அச்சிக்கல்களைப் பல முன்னகளிலிருந்து அணுகவேண்டும் என்பதும் இப்பொழுது உணரப்பட்டு வருகிறது. அதே போன்று பொருளடக்க ஆய்வும்: (content Analysis) தனி இயலாக உருவாகிக்கொண்டு வரு கிறது நூல்களைத் தக்கமுறையில் ஆராய்ந்து அவற்றின் தராதரத்தை மதிப்பிடுவதற்குப் பொருளடக்க ஆய்வு உதவியாக இருக்கிறது. சிக்காகோ நூலகப் பள்ளியில் இந்தப் புதிய நூலகவியல் கல்வி முறைகள் கையாளப்படு வதைக் காணலாம். நூலகவியல் கல்வித்துறையில் சிறப் பான இடம்பெற்று இந்தப் பள்ளி விளங்குகிறது. நூலகத்தில் பயிற்சி பல்கலைக் கழகங்களில் விரிவான கல்வி வசதிகள் அளிக் அப்படுவதுடன், பல பெரிய நிறுவனங்களில் 'உள்சேவை' பயிற்சிக்கான (In-Service Training) வசதிகளும் உள்ளன: