பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 & நூலக நாட்டில் நூற் றிருபது நாட்கள் முழுநேர நூலகவியல் பட்டப் படிப்பிற்குப் பின்னர், அமெரிக்காவைப் போன்று, அவர்களுக்கு நூலகவியலில் முதுகலைப்பட்டமே வழங்கலாம். குறைந்த காலத்தில் முதுகலைப்பட்டம் வழங்குவதா? ஏனைய பாடங்களில் முது கலை மாணவர்கள் இரண்டாண்டுகள் பயிலுகின்றனரே! என்று ஒரு சிலர் எண்ணலாம். ஒராண்டு போதாது என்று கருதினுல் அதனை இரண்டாண்டுப் படி பாகக் கொண்டு அவர்களுக்கு முதுகலைப்பட்டம் வழங்கலாம் மேலும் பலர் ஏனைய முதுகலைப்பட்டங்களைப் போன்று நூலகவியல் பட்ட மும் எம். ஏ. அல்லது எம். எஸ்.சி. என்று இருக்க வேண்டு மென விரும்புகின்றனர். இக் கருத்தும் சிந்திப்பதற் குரிய தாகும். இரண்டாண்டுகள் பயிலுகின்றகால் மாணவர்கள் நூலகவியல் பள்ளிகளை நடத்துகின்ற பல்கலைக் கழக நூல கங்களிலேயே சிறந்த நேர்பயிற்சியின நல்ல முறையி லே பெறுவதற்கு உரிய சூழ்நிலையை அமைக்கவேண்டும். ஒராண்டுப் பயிற்சிக்காலமெனினும் அவர்கள் படிக்கின்ற பல்கலைக்கழக நூலகங்களிலேயே தாமான .ே தர் பயிற்சி யைப் பெறுதற்கு வாய்ப்புக்களே வழங்கவேண்டும் மேaல நாடுகளைப் போன்று அவர்களே ஓய்வு நேரங் களில் பல் கலக் கழக நூலகங்களில் பணியாற்றச் செய்து அதற்கு ஊதிய மும் வழங்கலாம். இதனால் அவர்கள் சிறந்த பயன்களை அடைந்து வருங்காலத்தில் நூலகங்களை நன்கு நடத்து தற் குரிய ஆற்றலையும் அனுபவத்தை யும் பெற இயலும் இன்று தம் நாட்டில் இரண்டு நிலைகளில் நூலகவியல் பட்டப்படிப்பு உள்ளது. ஒரு நிலை நூலகவியல் இளங் கலைப் பட்டப் படிப்பு (B. Lib. Sc): மற்ருெ நிலை முதுகலைப் பட்டப் படிப்பு (M. Lib. Sc). இரண்டிற்கும் தனித் தனியாக ஒராண்டு படிப்புக் காலமாகும். முதுகலைப் பட்டம் பெற்றவர்களும் இளங்கலைப் பட்டம் பெற்ருே அன்றி டிப்ளமோ பெற்ருே துறையில் பல ஆண்டுகள் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர் களும் நூலகவியல் கலையில் சிறந்த ஆய்வுகளை நடத்து வதற்கு நம் நாட்டில் வசதிகளே ஏற்படுத்துதல் வேண்டும்.