பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சிறப்புக்கள் 209. அவ்வாறு ஏற்படுத்திளுல்தான், நூலகவியல் கல்வி மேலை நாட்டைப் போன்று நம் நாட்டில் நன்கு விளங்கும். நூலகவியல் பள்ளிகளில் அவைகளுக்கென தனி நூல கங்கள் விளங்குதல் வேண்டும். அந்நூலகங்களில் நூலக வியல் பற்றிய எல்லா நூல்களும் பருவ வெளியீடுகளும், நூலகவியல் மாணவர்கள் தங்களது பொது அறிவை வளர்த்துக் கொள்வதற்குத் துணைபுரியும் பல நூல்களும் இடம் பெறுதல் வேண்டும். விலையுயர்ந்த பாட நூல்களை மாணவர்களுக்கு அமெரிக்கப் பல்கலைக்கழக நூலகங்கள் வாடகைக்குக் கொடுத்து உதவுவதுபோல் நம் நாட்டிலும் செய்யலாம். நூலக நூற்பட்டியியல், ஆய்வு உதவி இயல் ஆகிய இரு பாடங்களுக்கும் நூலகவியல் பள்ளிகளில் செய் முறைக் கூடங்கள் (Laboratories) இருத்தல் வேண்டும். அங்கு இன்றியமையாது தேவைப்படுகின்ற நூல்களும் சாதனங்களும் இருத்தல் வேண்டும். மேலும் நூலகங்களில் பணியாற்றுவோர் பணியாற்றிக் கொண்டே நூலகவியல் கல்வி பயிலுவதற்குரிய வாய்ப்பும் வசதியும் நம் நாட்டில் ஏற்பட வேண்டும். 7. பொதுநூலகங்கள் அமெரிக்காவில் நூலக வளச்சியைக் கவனிப்பதற்கான அரசாங்க அமைப்பு மிகவும் திறமையாகவும், சிக்கனமாக வும் இயங்கி வருகிறது. அதைப் பின்பற்றி இந்தியாவிலும் ஒர் அரசாங்க அமைப்பை ஏற்படுத்தலாம். அரசாங்க அளவில் அடிப்படை அலுவல்களைக் கவனிப்பதற்குத் தகுதி வாய்ந்த திறமை வாய்ந்த ஒர் அமைப்பு இல்லாவிடில் பொது நூலக வளர்ச்சிப் பணிகள் வீண் விரயமாகவே முடியும். அமெரிக்காவில் அரசாங்க அளவில் நூலக அமைப் |க்கள் எவ்விதம் செயல்படுகின்ற என்பதை ஆராய்ந்து வற்றைப் பின்பற்றி இந்தியாவிலும் அமைத்தல் தலம். மேலும் பொது நூலகப் பணியில் அமெரிக்காவில் கையா ஆகும் சில முக்கியமான முறைகளை நம்நாட்டிலும் சிறப்பாகக் நூ-14