பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சிறப்புக்கள் 2.13 - கல்வித்துறையில் பதவி உயர்வு ஏற்படுங்கால் இத்துறையை விட்டு நீங்கிவிடுகின்றனர். சிலர் பதவி உயர்வு இல்லா மலேயே தங்கள் நிலைத்த துறைக்குத் திரும்பி விடுகின்றனர். இருக்கின்ற ஒரு சிலரும் இங்கிருந்தால் ஏதோ கூடுதல் சம்பளம் கிடைக்கின்றது: கல்வித் துறையில் பதவி உயர்வு கிட்டியதும் இதனை உதறித்தள்ளி விடவேண்டும்; அதுவரை ஒரு மாதிரியாக இங்கு காலத்தைக் கடத்தி விடலாம்' என்ற மனநிலையில்தான் உள்ளனர். சுருங்கக் கூறின் இவர் கள் இத்துறையில் நீடித்து இருப்பதற்கில்லை. நிலைத்து இல்லாமலிருக்கின்றவர்களுக்கு நூலகத்துறை உயர் பதவி கள் அளிக்கப்படுவதால், நூலகத் துறையில் இருக்கின்ற வர்கள், நாளடைவில் துறையை விட்டு நீங்குகின்றனர். இதஞல் இருவிதத்தில் நமக்கு நட்டம் ஏற்படுகிறது. எனவே இதனை நமது அரசாங்கம் நன்கு பரிசீலித்து, நூல கத் துறையில் பணியாற்றுவோர், அத்துறையில் வளர்ந்து நிலைத்திருப்பதற்குரிய ஆக்கப் பணிகளைச் செய்தல் வரவேற் பதற்குரியதாகும். மேலே நாடுகளைப் போன்று நூலகவியல் உயர் கல்வி பெற்றவர்களேயே நூலக ஆணைக் குழுவின் செயலாளராகப் போட வேண்டும். இன்று மாவட்டக் கல்வி அதிகாரிகள் செயலாளராக உள்ளனர். நூலகத் தொழில் துறை வளர வேண்டுமெனின், அத்துடன் பொது நூலகத்துறை மேலும் வளர்ச்சி பெற வேண்டுமெனின், நமது மாநிலத்தில் ஏற் பட்டிருக்கும் பொது நூலக வளர்ச்சியால் மக்கள் சிறந்த பயன்களைப் பெற வேண்டுமெனின் பொதுக் கல்விப் பட்ட மும், நூலகவியல் பட்டமும் பெற்ற, அதாவது நூலகவியல் கல்வி அறிவுடையவர்களே, செயலாளராக வரவேண்டும். ஒரு சிலர் அவர்களுக்கு ஆட்சித்திறனும், அனுபவமும், அரசாங்க அலுவலக நடைமுறையினைத் தெரிந்து கொள்ளக் கூடிய பயிற்சியும் இல்லையே என்று கூறலாம். இது வேண்டு மென்றே எழுப்பும் விவாதமாகும். எனவே இதற்கு முடி வென்பதே இருக்காது. ஏனைய துறைகளை எடுத்துக்கொள்