பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கன் வோம். ஏன்? கல்வித் துறையையே எடுத்துக்கொன் வோம். மாவட்டக் கல்வி அலுவலரின் தலையாய பணி பள்ளிக் கூடங்கள் சரியாக நடக்கின்றனவா என்பதைப் பார்ப்பதுதான் என்பதை நாமறிவோம். எனவே அவர் களுக்குப் பொதுக் கல்வியோடு ஆசிரியர் பயிற்சிப் பட்ட மும் அவசியமாகிறது. ஆசிரியர் பயிற்சிப் பட்டம் பெருத ஒருவர் கல்வி அதிகாரியாக இருக்கிருரா? இருக்க முடியாது. ஆளுல் நூலகக் கல்வியும் பயிற்சியும் பெருதவரும் மற்ருெரு துறையின் முழுநேர ஊழியராகவும் உள்ள ஒருவர் செய லாளராக இருந்து கொண்டு மாவட்ட நூலக ஆணைக் குழு விற்கு ஆலோசனை கூறுவது நம் நாட்டில்தான் தடை முறை யிலுள்ளது. இது வியப்பிற்கும் வேதனைக்கும் உரியதாகும். மேலும் கல்வியதிகாரிகள் பதவிக்கு நேரடியாகத் தேர்ந் தெடுக்கப் படுகின்றகால் (Direct Recruitment), அவர்கள் எந்த அனுபவத்தோடு பதவிக்கு வருகின்றனர்? மேலும் அவர்கள் அலுவலக நடை முறையினை அறிந்து கொண்டா வருகின்றனர். அவர்களும் அனுபவமில்லாதுதான் வருகின் றனர். நாளடைவில் அனுபவத்தைப் பெறுகின்றனர்: தடை முறையினை அறிந்து கொள்கின்றனர். துறைத் தேர்வுகளை எழுதி விதிமுறைகளையும், துறை நுணுக்கங்களை யும் தெரிந்து கொள்கின்றனர். இந்நிலையில்தான் ஏனைய துறையிலுள்ளோரும் உள்ளனர். எனவே மேற்கூறிய காரணம் அடியோடு பொருந்துவதன்று. நூலக அலுவலரும் அவர்களைப் போன்று அனுபவமும் தொழில் அறிவும் நான டைவில் பெறுவார். நூலகருக்கும் ஆட்சிப் பயிற்சிக்கு அவர்களைப் போன்று ஏற்பாடு செய்யலாம்; துறைத் Goff assān usio (Departmental Tests) of suffoor wroups ஏற்பாடு செய்யலாம். பொது நூலகங்கள் நன்கு நமது தமிழகத்தில் காலூன்றி விட்டன. இனி நாம் செய்யவேண்டியது அவற்றை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தச் செய்தலே ஆகும். அதற்கு உறுதுணையாக நூலகவியல் கல்வி பெற்ருேரே விளங்க முடி