பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 & 4 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் தொடர்ந்தனர். அப்பொழுது அவர்கள் காட்டிய அன் புள்ளத்தையும், எனக்காக அவர்கள் பட்ட பாட்டையும் திண்க்க தினேக்க என் உள்ளம் இன்றும் நெக்குருகுகிறது. அன்று மாலை பேராசிரியர் லுபெட்ஸ்கி என்ளேத் தேடிப் புன்னகையுடன் ஓடி வந்தார். எனது சோற்றுப் பிரச்சினைக்கு ஏதோ தீர்வு கண்டுவிட்ட பெருமித உணர்வு அவரது முகத்தில் பிரதிபலித்தது. அகமும் முகமும் மலர வந்த அவர்கள் என்னிடம், அருமையான அரிசிச் சோறு உங்களுக்குக் கிடைக்கப் போகிறது! வேறெங்கு மில்லை, எங் கள் வீட்டிலேயே! புறப்படுங்கள், போவோம்!' என்று உற்சாகமாகக் கூறியவாறே என்னை அழைத்தார்கள். நானும் மனமகிழ்ச்சியோடு அவர்களுடன் சென்றேன். போகும் வழியில், பால்போல் வெண்மையான கலிபோர் னியா அரிசியையும், காய்கறிகளையும், பருப்புவகைகளையும் பேராசிரியர் அவர்களே வாங்கிக்கொண்டு வந்தார்கள். இல்லம் சென்றதும், விரைந்து என்னைச் சமையலறைக்கு அழைத்துச் சென்ருர்கன். சமையல் செய்யும் கருவிகனே யெல்லாம் காட்டி, அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் விளக்கிக்கூறி என்ன அவ்வறையில் விட்டுவீட்டுப் பேராசிரியர் விரைந்து வெளியே சென்ருர். சிறிது நேரத்திற்கெல்லாம் தமது துனேவியாருடன் அவர் திரும்பி வந்தார். உங்களுக்கு உதவி செய்ய என் மனை வியை அழைத்து வந்திருக்கிறேன்' என்று கூறி இருவரை யும் அறிமுகம் செய்து வைத்தார். நானும் அந்த அம்மை யாருமாகச் சேர்ந்து ஒரு மணி நேரத்தில் ஒரு சிறந்த தமிழ் நாட்டு விருந்தைத் தயாரித்து மூடித்தோம். அந்த விருந்தை அவர்களுக்கும் படைத்து நானும் உண்டு மகிழ்ந்தேன். பேராசிரியரும் அவரது மனைவியாரும் எனது நளபாக’த்தை வெகுவாகப் புகழ்ந்தார்கள். முக்கியமாக, அரிசிச் சோற் நில் பாகிலப் பெய்து உண்ணுவதைப் பேராசிரியர் பெரிதும் போற்றிஞர். சுவைத்துச் சுவைத்து உண்டார். இவ்விதம் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பேராசிரியரின் இல்லம்