பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

..o.o. நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் ஆனல், இதைக் கொண்டு, மாபெரும் பிரிட்டனின் ஒரு கூறுதான் அமெரிக்கா எனக் கருதுவது தவறு. 1893-இல் Lou Life; Gagā4 or Lifansri (Frederick Jackson Turner) எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதுபோல், அமெரிக்கரின் முரட்டுத்தன்மையிலும், வலிமையிலும், துல்லியமும், எதை யும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் மிளிர் கின்றன. எண்ணிய எண்ணியாங்கு எய்தும் திண்மையும், புத்தம்புதிய கருவிகளைக் கண்டுபிடிக்கும் நுண்ணறிவும் அவர்களின் உடன்பிறப்பு: உலகாயதப் பொருள்களே உடனுக்குடன் மனதில் பதித்துக்கொள்ளும் தனிப்பேராற் றல் அவர்களுக்கு உண்டு. அதில் அவர்களுக்குக் கலை யுணர்வு குன்றியிருப்பினும், அதனினும் மேன்மையான குறிக்கோளையடைய அதைப் பயன்படுத்திக் கொள்ளும் திறமை போற்றுதற்குரியது. எந்நேரமும் பம்பரம்போல் சுற்றிச் சுழன்று சுறுசுறுப்பாக இயங்குவதில் அவர்கள் எறும் புக்கு நிகர். நல்லதற்காயினும், தியதற்காயினும், எதிலும் தங்களின் தனித்துவத்தின் முத்திரையைப் பதிப்பார்கள். அவர்களுடைய நடவடிக்கைகளில் ஒருவித அகங்காரம் காணப்படுகிறது என்ருல், அதற்குக் காரணம், மனிதனுக்கு மனிதன் அடிமை அல்லன் என்ற சுதந்திர உணர்வாகும். உண்மை அமெரிக்கன் உழவன்

  • உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்ருர் வள்ளு. வர். வேளாண்மை வாழ்க்கையே வாழ்க்கை' என்பது அமெரிக்கர்கள் கருத்து. ஆரம்பக்கால அமெரிக்கர்கள், பிறரைத் தொழுதுண்டு பின்செல்லாமல், சுதந்திரமாக உழுதுண்டு வாழ்ந்து வந்த காரணத்தினுல், எதிலும் அவர் களுக்குச் சுதந்திர உணர்ச்சியே மேலோங்கி நிற்கிறது. இன்றைய அமெரிக்கரின் தனி மனிதச் சுதந்திர உணர் வுக்கு, ஆதியில் அமெரிக்க விவசாயிகளிடம் குடிகொண் டிருந்த சுதந்திர உணர்வு வாழையடி வாழையாக வளர்ந்: தோங்கி வந்திருப்பதே காரணம் எனலாம். ஆகவேதான், "சின்னஞ் சிறு பண்ணையில் சுதந்திரமாக உழுதொழில்