பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழைப்பால் உயர்ந்த மக்கள் 3.5 ■■ ■- - - _ புரியும் விவசாயிதான் உண்மையான அமெரிக்கன்' என்ற கருத்து உருவாகியது. இக்கருத்தை உலகெலாம் பரப்பியவர் தாமஸ் ஜெபர்சன் (Thomas Jefferson) ஆவார். சுழன்றும் பtட் பின்னது உலகம்’ என்றது போல், உழவர் உற்பத்தி செய்யும் விளைபொருள்களையே சமுதாயத்தின் ஏனைய மக்கள் எதிர்பார்க்க வேண்டியிருந்த காரணத்தினுல், அமெரிக்க வரலாற்றின் ஆரம்பக் காலத்தில், விவசாயிகள் தான் பெரிதும் மதிக்கப்பட்டார்கள். உழவர்கள், கைம் மாறு கருதாமல், இயற்கையோடிணைந்து கடுமையாக உழைக்கிருர்கள். நகர வாழ்க்கையின் ஆடம்பரங்களிலும், குழப்பங்களிலும் கவனம் செலுத்தாமல், உணவுப் பொருள் கA விளைவித்துக் குவிப்பதிலேயே கண்ணுக இருக்கிருர் கள். இதல்ை, உழவர்கள் மற்றவர்களின் மரியாதைக் குரியவர்களாகிரு.ர்கள். ஒரு நாட்டில் மக்களாட்சி தழைத் தோங்குவதற்குத் தனித்துவமும், சமவாய்ப்பும் அடிப் படைத் தேவைகளாகும் என்பது ஜெபர்சனின் கொள்கை. கணித்துவம், சமவாய்ப்பு-இவ்விரண்டின் முழு வடிவமாக அவர் கண்ணுக்குக் காட்சி தந்தவன் அமெரிக்க விவசாயி தான். எனவே, உண்மையான அமெரிக்கன் பண்ணை வாழ் உழவனே' என்று அவர் ஆணித்தரமாக எடுத்து ரைத்தார். மேற்கூறியவாறு தனித்துவமும், சமத்துவமும் அமெ ரிக்கரின் உயர்தனிப் பண்புகளாக வளர்ந்தன. அமெரிக்க நாடு வளர வளர, இத்தனித்துவமும் மேலும் வலிவும் பொலிவும் பெற்று வளர்ந்தது. தன்முயற்சியும், உள்ளத் நில் மாக்கமும் கொண்ட சுதந்திரமான முதலாளித்துவ avenfahrion sit (Capitalist Businessmen) Guðfri sã firrifă6īr. மேலும், ஆதியில் குடியேறியவர்களில் பெரும்பான் மையினரான புராடஸ்டண்டு சமயப்பிரிவினரின் வழி வழிமரபும், தனித்துவம் தழைத்தோங்க உறுதுணையாக IBM-3