பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ கழக ஆட்சியாளர்க்கும், சிறப்பாக அதன் துணைவேந்தர். மருத்துவ விற்பன்னர், கல்விப் பேரறிஞர், அரசியல் மாமேதை டாக்டர். ஏ. இலட்சுமணசுவாமி முதலியார் அவர்களுக்கும் நான் எனது இதயங் கனிந்த நன்றி யினைத் தெரிவிக்கின்றேன். மேலும் இந்நூல் நல்ல முறை யில் வெளிவருவதற்குத் துணை புரிந்த எனது நண்பர்கள் திரு. கன. முத்தையா, திரு. செல்லப்பா ஆகியவர்களுக்கு என் நன்றி உரியது. இந்நூலின் இறுதியில் காணுகின்ற நூலகவியல் சொற் பட்டி, நான் இதுவரை எழுதிவந்த கட்டுரைகளிலும் நூல் களிலும் பயன்படுத்தப்பட்ட நூலகவியற் சொற்களைக் கொண்டிலங்குகின்றது. என் வழியிலே நின்று நூலக வியலைத் தமிழ் மொழியிலே ஆக்கித் தருவதற்கு விரும் பு கின்ற நூலகவியல் துறையினர்க்கு இது நன்கு பயன்படும் என்று கருதி, இதனைத் தொகுத்துத் தந்துள்ளேன். இச் சொற்களைப் பற்றி ஏதேனும் திருத்தம் இருப்பின் எனக்கு அதனை அறிவிப்பின் நான் பெரிதும் மகிழ்வேன். இந் நூலைப்பற்றி மூன்று பெரியார்கள் தங்களது கருத்து மணிகளைத் தந்துள்ளனர். அவர்களிலே ஒருவர் தமிழக அரசின் கல்வி-தொழில்துறை அமைச்சரும், மக்களால் நாவலர் என்றும் நடமாடும் நூலகம் என்றும், போற்றப் படுகின்றவருமாகிய மாண்புமிகு இரா. நெடுஞ்செழியன் M. A., ஆவார்கள். இரண்டாமவர் நூலகவியலுக்காகவே உயிர் வாழ்கின்ற உலகப் பேரறிஞர், தேசிய நூலகவியல் ஆராய்ச்சிப் பேராசிரியர் டாக்டர் சி. ரா. ரங்கநாதன் M. A., L T, D. Litt., F. L. A., ஆவார்கள். மூன் ருவது_பெரி யார் என் நலனில் பெரிதும் அக்க்றை காட்டும் எனது பேரா சிரியரும். பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியரு மாகிய் வித்துவான் அன்பு கணபதி ஆவார்கள். இம்மூவர்க் கும் தான் என்றென்றும் கடப்பாடுடையேன். 8–4–6 7, லகவியல் துறை, 車 Q•శీ; பல்கலைக்கழகம், அ. திருமலைமுத்துசுவாமி சென்னை-5.