பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் சிக்காகோ, சின்சினுட்டி, கிளீவ்லாந்து, டெட்ராய்ட், இலாஸ் ஏஞ்சல்ஸ் முதலிய நகரங்களிலும் வரிப்பணம் மூலம் நடத்தும் பொதுநூலகங்கள் அமைந்தன. நாட்டி லேயே இரண்டாவது பெரிய பொது நூலகமான நியுயார்க் பொதுநூலகம் 1895-இல் நிறுவப்பட்டது. உலகின் மிகப் பெரிய நூலகமான காங்கிரசு நூலகம், 1800-இல் அமெ ரிக்க அரசாங்கத்தினுல் நிறுவப்பட்டது. அமெரிக்கக் காங் கிரசின் பயனுக்காக இது அமைக்கப்பட்டது. அது முதல், இது பொது நூலகமாகவே இயங்கி வருகிறது. காங்கிரக நூலகத்தின் இயக்குநரை அமெரிக்கக் குடியரசுத்தலைவரே நேரடியாக நியமிக்கிரு.ர். வரிப்பணத்தைப் பயன்படுத்தி மேன்மேலும் பொது நூலகங்கள் தொடங்கப் பெற்ற காரணத்தால் நூலகத் தொழில் ஒரு முக்கியமான தொழிலாக வளர்ந்தது. 1876இல் அமெரிக்க நூலகச் சங்கம் அமைக்கப்பட்டது. நூலகங் களைப் பெருக்கவும், வளர்க்கவும், நூலகத்தொழிலில் தகுதி யும் திறமையும் வாய்ந்தவர்களே ஈடுபடுத்துவதற்கும் இந்தச் சங்கம் மேற்கொண்டு வரும் மாபெரும் பணியை நினைத்தாலே நமக்கு மலேப்பு ஏற்படும். மேலும் ஆண்ட்ரு கார்னிகி போன்ற வள்ளல்கள் பல நகரங்களில் ஏற்படுத்திய புதிய பொதுநூலங்களும், தாராளமாக வழங்கிய ஏராள மான நன்கொடைகளும் அமெரிக்காவில் பொது நூலகங் களின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக அமைந்தன. அமெரிக்காவில் நூலகப்பணிகளில் மாநிலங்களிடையே பெரும் ஏற்றத்தாழ்வு இருக்கிறதா என்பதைத் தீர்மானிப்ப தற்காக 1920-இலும் 1940-இலும் ஆணையாளர்கள் நிய மிக்கப்பட்டார்கள். அந்தக் காலத்தில், நூலகப்பணிக் கான நிதியை மாநிலச்சட்ட மன்றத்திடமிருந்து மாநில அரசுகள் பெற்றுவந்தன. 1948-இல் அமெரிக்க நூலகச் சங்கம் பொதுநூலகப்பணி பற்றிய தனது தேசியத் திட் டத்தை வெளியிட்டது. நாடு முழுவதற்கும் பொருந்தும்