பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 & நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் மும் அவர்களின் குழந்தைகளும் அவர்களுக்குப் பின் வருட வர்களும் பரம்பரை பரம்பரையாகக் காங்கிரசு உறுப்பினர் களுக்குக் கடமைப் பட்டிருப்பார்கள்', முதலிடம் இன்று இலவசப் பொது நூலகங்களின் எண்ணிக்கை யில் உலகிலேயே முதலிடம் வகிக்கிறது அமெரிக்கா. அங்கு 8000-க்கும் அதிகமான பொது நூலகங்கள் உள்ளன. அவற்றிற்கு ஏறத்தாழ 3600 கிளைகளும் உண்டு. பொது நூலகங்கள் ஒவ்வொன்றையும் நூலகப் பொறுப்பாளர் குழு (Board of Trastees) ஒன்று நிருவகிக்கிறது. பொறுப் பாளர்களைச் சாதாரணமாக நகராட்சித் தலைவர் (Mayor) நியமிக்கிருர், இந்த நியமனத்தை நகராட்சி மன்றம் ஒப்ப வேண்டும். பொறுப்பாளர் குழு நிருவாக முறையினுல் பல வித நன்மைகள் உண்டு. முக்கியமாக (1) நிபுணர்களின் செயல் முறைகளே இக்குழு கண்காணிக்கிறது: (2) நூலகர் கள் அடிக்கடி மாறுவதால், நூலகத்தின் கொள்கையில் மாறுதல் ஏற்படாமல் இக்குழு பார்த்துக்கொள்கிறது. (3) அரசியல் செல்வாக்குகளில் சிக்கி அலேக்கழியாமல் நூலகத்தை இக்குழு பாதுகாக்கிறது. (4) நம்பிக்கை யோடும், பொறுப்புணர்வோடும் இக்குழு செயல்படுகிறது. அமெரிக்கப் பொதுநூலகங்களின் நிருவாக அமைப்பு முறை எவ்விதம் அமைந்திருக்கிறது என்பதைப் பின்வரும் நூலக ஆட்சி அமைப்பியல் வரைபடத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்: