பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலகநாடு 7


_

புதிய நூலகச் சட்டத்தில் கையெழுத்திடும்பொழுது வம்படும் பெருமிதமும் மகிழ்ச்சியும் மனநிறைவும் இதுவரை வணக்கு ஏற்பட்டதே இல்லை! எல்லா மக்களுக்கும் உதவும் வகையில் இயங்கி வரும் நூலகங்களைத்தான் சிறந்த பொது நூலகங்கள் எனக் கருதமுடியும். உலக அதிசயங்களை அறிந்துகொள்ளத் துடிதுடிக்கும் இளைஞர்களுக்குமட்டும் உரியதன்று நூலகம்; எதிர்கால வாழ்க்கைக்குத் தயாரா கும் இளைஞர்களுக்கு மட்டும் சொந்தமன்று:தங்கள் அலு வல்களுக்கு உறுதுணை புரியும் தகவல்களைத் தேடித்திரியும் சுறுசுறுப்பானவர்களுக்கு மட்டுமன்று; எல்லோருக்கும்: ஒவ்வொருவருக்கும் பயன்படுவதாக நூலகம் அமைய வேண் டும். அதில்தான் நூலகத்தின் உண்மையான மதிப்புப் புதைந்திருக்கிறது. இன்று நம் நாட்டுக்கு அதிகமான பல தரப்பட்ட நூல்கள் தேவை. இந்த நூல்களுக்குச் சிறந்த காப்பிடங் சுளும் வேண்டும். தலைமை நூலகங்களாயினும், கிளை நூல கங்களாயினும், ஊர்தி நூலகங்களாயினும்-எல்லா நூல சுங்களும் மக்களுக்கு எளிதில் கிட்டும் தூரத்தில் இருத்தல் வேண்டும். சகிப்புணர்ச்சியை வளர்க்கவும் அறியாமையை ஒழிக்கவும் உதவும் பயனுள்ள சாதனமாக அமைந்திருப் பவை நூல்கள். எதையும் புரிந்து கொள்ளும் ஆற்றலில்லாத கீழ்த்தர மனிதர்கள் கண்டதை யெல்லாம் கடிந்துரைப் பார்கள்’ என்று பிரெஞ்சு அறிஞர் ஒருவர் சொன்னர். தற் கால உலகில் கீழ்த்தர மனங்கொண்டவர்கள் வாழ முடி யாது. அறிவுப்பசி கொண்ட சுறுசுறுப்பான உள்ளம் உடையோர்தான் இன்றைய உலகில் வாழமுடியும். அறிவுப் பசியைத் தூண்டவும் சிந்தனையை வளர்க்க வும் சிறந்த பயிற்சிக் கூடமாக அமைந்திருப்பவை நூல கங்கள். அறிவாற்றல் மிக்க காங்கிரசு உறுப்பினர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் இன்று இந்த விழாவில் கலந்துகொள்வது கண்டு களிப்படைகிறேன். இந்தச் ச.-ம்தை நிறைவேற்றியதற்காக, இன்றையச் சமுதாய