பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் எல்லா நூலகங்களிலும் 25 சதவிகித நூலகங்கள், மக்க ளில் 40 சதவிகிதம் பேருக்குப் பயன்படுகின்றன. 40 சத விகித மக்கள் போதிய அளவு நூலக வசதியுடனிருக்கின் னர். 65 சதவிகித நூலகங்கள் 10 சதவிகித மக்களுக்கு உதவுகின்றன. இந்த 10 சதவிகித மக்களுக்கு நூலகவசதி போதிய அளவில் இல்லை. 1950-இல் 2.7 கோடி மக்கள் நூலக வசதியினைப் பெறமுடியாது இருந்தார்கள். 1980இல் இவர்களின் எண்ணிக்கை 2 கோடியாகக் குறைந்தது. 1950-க்கு முன்புவரை அமெரிக்கக் காங்கிரசில் நூல கப்பணி மசோதா எதுவும் கொண்டுவரப்படவில்லை. 1950இல் கொண்டு வரப்பட்ட மசோதா 3 வாக்குகளில் தோல்வி யடைந்தது. 1956-இல் சூனில் நூலகப்பணிச் சட்டம் நிறைவேறியது. அது முதல், 10,000-க்குக் குறைந்த மக்கள் தொகையுள்ள கிராமப்பகுதிகளுக்கு நூலகப் பணியை விரிவுபடுத்துவதற்கு ஆகும் செலவில் ஒரு பகுதியை மத்திய அரசாங்கம் கொடுத்துதவுகின்றது. 1958-இல், முதன் முதலாக நாடு முழுவதிலும் தேசிய நூலக வாரம் அனுசரிக்கும்படி குடியரசுத்தலைவர் அறிவித் தார். விழி, படி!' என்பது முதலாவது தேசிய நூலக வாரத்தின் முழக்கமாக அமைந்தது. புதிய நூலகப் பணிச் சட்டம் ஒன்றில் 1964 பிப்ரவரி 11-இல் குடியரசுத் தலை வர் கையெழுத்திட்டார். கிராமப் பகுதிகளில் வாழும் 3:8 கோடி மக்களுக்கு உதவும் வகையில் நூலகப்பணியை விரிவு படுத்தவும் நகர நூலகங்களை மேலும் வலுப்படுத்தவும், நூலகக் கட்டிடங்களைப் புதுப்பிக்கவும், புதிய கட்டிடங்கள் கட்ட நிதி வழங்கவும் இந்தச் சட்டம் வகை செய்தது. குடியரசுத்தலைவர் பெருதம் இச்சட்டத்தில் கையெழுத்திட்டபொழுது குடியரசுத் தலைவர் இலிண்டன் ஜான்சன் கூறியது இங்கு கருதற்பால் து:

  • நான் எத்தனையோ சட்டங்களில் கையெழுத்திட்டி குக்கிறேன்: கையெழுத்திட்டும் வருகிறேன். ஆனல், இந்தப்