உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7. ஹாவாய்த் தீவுகள்

இருப்பிடம்

ஹாவாய்த் தீவுகள் பல தீவுகள் அடங்கிய ஒரு தொகுதியாகும். இவை எரிமலையினால் உண்டானவை ஆசியாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் இடையே அமைந்திருப்பவை. இவற்றிற்கு முன்பு இருந்த பெயர் சேண்ட்விச் தீவுகள் என்பதாகும்.

இத் தொகுதியிலுள்ள எட்டுப் பெருந்தீவுகளில் மிகப்பெரியது ஹவாய். ஹவாய்த் தீவுகள் ஆழமான ஓர் வெட்டுக்கள் உள்ள கரைகளை உடையவை; நல்ல துறைமுகங்களைக் கொண்டவை. மலை சார்ந்திருந்த போதிலும், செழிப்பான சரிவுகளும் பள்ளத்தாக்குகளும் அவற்றிற்கு உண்டு. இவை பாலினீசியப் பிரிவைச் சார்ந்தவை.

வரலாறு

கேப்டன் குக் என்பார் சேண்ட்விச் தீவுகளை 1778 இல் கண்டுபிடித்தார். அவரது புரவலர் சேண்ட்விச் கோமான். எனவே, அப்பெயரைத் தாம் கண்டுபிடித்த தீவுகளுக்குக்குக் சூட்டினார். பின் அவற்றிற்கு ஹாவாய் என்னும் பெயர் வரலாயிற்று.

1795 இல் முதல் காமிஹேமா அரசனின் கீழ் ஹாவாய்த் தீவுகள் ஒன்றுபட்டன; காட்டுக்குடி மக்களின் தொடர்ந்த போர்களும் ஒருவாறு முடிந்தன, இரண்டாம் காமிஹேமா ஆட்சியில் அமெரிக்காவிலிருந்து 1820 இல் சமயம் பரப்புவோர் வந்தனர்.