பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

ஹாவாய்க் கவர்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒரு நாடாக இருப்பதால், வாஷிங்டன்னுக்கு இரு செனட்டர்களையும் (மேலவை உறுப் பினர்), ஒரு பிரதிநிதியையும் (பேராளர்) ஹாவாய் அனுப்புகிறது. இதன் அலுவல்கள் இரு அவை கொண்ட மன்றத்தினால் நடைபெறுகிறது. இந்த அவைகளில் ஒன்று செனட்டர் கொண்டது. மற்றொன்று பிரதிநிதிகள் அடங்கியது. இது அமெரிக்காவின் 50 வது நாடாகும்.

சிறப்பு

அமெரிக்காவிலுள்ள ஒரே தீவு நாடு ஹாவாய். அமெரிக்காவிலிருந்து முழு அளவுக்குப் பிரிந்திருக்கும் நாடும் இதுவே. இதன் பரப்பு 6,454 சதுரமைல். இது அமெரிக்காவிலிருந்து 2,000 மைல் தொலைவிலுள்ளது. இருப்பினும், அமெரிக்கக் காங்கிரசிற்குச் செல்லும் பிரதிநிதிகள், வாஷிங்டன்னை விமான மூலம் 9 மணி நேரத்தில் அடையலாம்.

பூக்கள் நிறைந்த நாடு; கடற்கரை உள்ள நாடு; துன்பச் சுவைப் பாடல் இசைக்கும் நாடு; அலை சவாரி செய்யும் நாடு; ஹூலா நாட்டியம் ஆடும் நாடு ஹாவாய் நாடு.

அமெரிக்காவிற்குப் பாதுகாப்பு அரணாக உள்ளது; பசிபிக்கில் வாணிப மையமாக உள்ளது ஹாவாய் நாடு. சர்க்கரை அதிகம் விளையும் நாடு. இதன் தலைநகர் ஹோனலுலு.