பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

அதிலிருந்து பீஜித்தீவுகளில் ஐரோப்பிய நாகரிகம் வேர்விடத் தொடங்கியது.

இவற்றை ஆளுவதற்குப் பீஜித் தலைவர்களுக்கு ஆற்றல் - திறமை - இல்லை போலும்! ஆகவே, இவை 1874இல் ஆங்கிலேயரின் குடியேற்ற நாடாக மாறியது. இன்று பிரிட்டனின் ஆளுகையில் உள்ளது.

தீவுகள்

இவை பல தீவுகள் அடங்கிய தொகுதியே. இவற்றுள் பெரியவை விதி லெவு வனுவா லெவு என்னும் தீவுகள். முன்னதின் பரப்பு 4,000 சதுர மைல். பீஜியின் தலைநகர் சூவா. இது ஒரு வாணிய நகரம்; இயற்கையாய் அமைந்த துறைமுகமும் ஆகும். பசிபிக் பெருங்கடல் வழியாகப் பயணத்தை மேற்கொள்ளும் கப்பல்களுக்கு இது சிறந்த துறைமுதம்.

மக்கள்

இங்கு இந்தியர், தமிழர், பீஜியர், சீனர், ஐரோப்பியர் முதலானோர் வாழ்கின்றனர். சமய அடிப்படையில் இந்துக்கள், முகமதியர்கள், சீக்கியர்கள், கிறித்துவர்கள் ஆகியோர் இங்குள்ளனர். மொழி அடிப்படையில் பார்க்க, தமிழர் இங்கு 40,000 பேர் உள்ளனர். இங்கு இராமகிருஷ்ண மடம் கல்விப் பணியும் சமயப்பணியும் செய்து வருகிறது.

கமிஷனர் (ஆணையர்)

இந்திய அரசின் பேராளராக இங்குக் கமிஷனர் ஒருவர் உள்ளார். இவர் இலண்டனிலுள்ள இந்திய