உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

ஹைகமிஷனருக்குக் (உயர் ஆணையருக்கு) கட்டுப் பட்டுச் செயல் புரிபவர்

பீஜியர்

இவர்கள் பயில்வான் தோற்றமுடையவர்கள். இவர்களது தலைமயிர் குச்சி போல் நிற்கும். இவர்கள் உடைகளில் அதிகக் கவனம் செலுத்துவதில்லை. செருப்புப் போடுவதில்லை. மீன் பிடிப்பது இவர்களுடைய தொழில். தென்னந்தோப்பு, வாழைத் தோட்டம் வைத்து இவர்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள். யாரிடமும் இவர்கள் கைகட்டி வேலை பார்ப்பதில்லை. அண்மைக்கால முதல் பீஜிப் பெண்களில் சிலர் சிகரட் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகிறார்கள்.

இவர்கள் மனிதனையே உயிரோடு உண்டவர்கள். 1867 இல் வருந்தத்தக்க நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இவர்கள் பாதிரி ஒருவரைக் கொன்று தின்றனர். இவர்கள் பூட்சை அதற்குமுன் பார்த்து அறியார்கள் போலும்! பாதிரியார் போட்டிருந்த பூட்சையும் வேகவைத்தனர். அதையும் பாதிரியார் உடலின் பகுதியென நினைத்து உண்டனர். இந் நிகழ்ச்சியோடு மனிதனை உண்ணும் வழக்கம் நின்றது.

இவர்கள் பல்லி, தவளை, எறும்புகள் முதலியவற்றையும் உண்கின்றனர். இவர்கள் அடிக்கடி தேநீர் பருகுவதுண்டு. காவா என்னும் ஒருவகைப் போதை தரும் நீரை இவர்கள் குடிப்பதுண்டு. பழங்கள், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ரொட்டி, மீன்,