பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்காம் பத்து

117


32. கழையமல் கழனி !

துறை: செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம்: தூக்கு: செந்தூக்கு. பெயர்: கழையமல் கழனி. இதனாற் சொல்லியது:சேரலின் பலவான குணநலன் களையும் உடனெண்ணிப் புகழ்ந்து, அவற்றுள் அவனது பொறையுடைமையைச் சிறப்பாகப் புகழ்ந்தது.

[பெயர் விளக்கம்: வளமையைக் குறிப்பார். வயல்களிலேயுள்ள நெற்றாள்கள், தம் பருமையாலும் உயர்ந்து வளர்ந்துள்ள தம் நெடுமையாலும் மூங்கிலைப் போலத் தோற்றுவன என்பாராய்க், 'கழை யமல் கழனி' எனச் சிறப்பித்துக் கூறியுள்ளனர். இந்நயத்தால் இப்பாட்டு இப்பெயரைப் பெற்றது. இதனால், சேரநாட்டு வளமைப் பெருக்கமும் அறியப்படும்.]


மாண்டனை பலவே போர்மிகு குருசில்நீ
மாதிரம் விளக்கும் சால்பும் செம்மையும்
முத்துடை மருப்பின் மழகளிறு பிளிற
மிக்கெழு கடுந்தார் துய்த்தலைச் சென்று
துப்புத்துவர் போகப் பெருங்கிளை உவப்ப 5

ஈத்தான்று ஆனா இடனுடை வளனும்
துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும்
எல்லாம் எண்ணின் இடுகழங்கு தபுந
கொன்னொன்று மருண்டனென் அடுப்போர்க் கொற்றவ!
நெடுமிடல் சாயக் கொடுமிடல் துமியப் 10
 
பெருமலை யானையொடு புலங்கெட விறுத்துத்
தடந்தாள் நாரை படிந்திரை கவரும்
முடந்தை நெல்லின் கழையமல் கழனிப்
பிழையா விளையுள் நாடகப் படுத்து
வையா மாலையர் வசையுநகர்க் கறுத்த 15

பகைவர் தேஎத் தாயினும்
சினவா யாகுதல் இறும்பூதால் பெரிதே!

தெளிவுரை: போர்க்களத்திலே எதிரிட்டு வந்தாரான பகைவரினும் மேம்பட்டு விளங்கும் போர்த்தலைவனே! நீதான்