பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

பதிற்றுப்பத்து தெளிவுரை


இடாஅ வேணி யியலறைக் குருசில்!
நீர்நிலக் தீவளி விசும்போ டைந்தும் . 15

அளந்துகடை யறியினும் அளப்பருங் குரையைநின்
வளம்வீங்கு பெருக்கம் இனிதுகண் டிகுமே
உண்மரும் தின்மரும் வரைகோள் அறியாது
குரைத்தொடி மழுகிய வுலக்கை வயின்றோறு
அடைச்சேம் பெழுந்த வாடுறு மடாவின் 20

எஃகுறச் சிவந்த வூனத் தியாவரும்
கண்டுமதி மருளும் வாடாச் சொன்றி
வயங்குகதிர் விரிந்து வானகஞ் சுடர்வர
வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி
பயங்கெழு பொழுதோ டாநிய நிற்பக் 25

கலிழுங் கருவியொடு கையுற வணங்கி
மன்னுயிர் புரைஇய வலனேர் பிரங்கும்
கொண்டல் தண்டளிக் கமஞ்சூன் மாமழை
காரெதிர் பருவம் மறப்பினும்
பேரா யாணர்த்தால் வாழ்கநின் வளனே! 30

தெளிவுரை : நெடுந்துாரத்து வானத்திடத்தே ஒளி விட்டு விளங்கும் மின்னலானது தோன்றிப் பரந்தாற்போல, புலித்தோல் உறையினின்றும் நீக்கிய புலவுநாற்றம் நாறும் முனையைக் கொண்ட வாளினை, நின் ஏவலுக்குட்பட்டவரான போர்மறவர்கள் வலக்கையிலே உயர்த்துப் பிடித்தவராகச் சென்று, பிறராற் கடத்தற்கரிய பகை அரணினை வெற்றி கொள்வர். இவ்வாறு, தூசிப்படையும் பகைவரது படை வகுப்பால் வெல்லற்கரிதாக விளங்கும் இயல்பினைக் கொண்டிருக்க விளங்கும், பெருமை கொண்ட வெற்றி மாலையினை அணிந்த, பெரும்படைக்குத் தலைவனாக விளங்குவோனே!

ஒதலும், வேட்டலும், அவை பிறரைச் செய்வித்தலும், (ஒதுவித்தல், வேட்பித்தல்) ஈதலும், ஏற்றலும் என்று சொல்லப்படும் அந்தணர்க்கு உரியவான ஆறு ஒழுக்கங்களைப் புரிந்தவராக ஒழுகிவருகின்ற, அறத்தொடு பட்டவையே விரும்பிச் செய்யும் அந்தணர்களது சொல்லுக்கு, ‘அவ்