பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்றாம் பத்து

85

விதமே’ என்று கூறி, அவ்வாறே நடந்தும் வருவாய். ஆனால், இவ்வுலகமோ நின்னைப் பணிந்து நின் ஆணைப்படியே ஒழுகி வரும், பொய்யா நாவிற் புல்வர் பாடும் பாடல்களால் நிறைந்துள்ளோனே! நாடு முழுவதும் பரவி விளங்கும் ஆராயப்படாத நல்ல புகழினைப் பெற்றுள்ளோனே! திருத்தமான அணிகளை அணிந்துள்ள தேவியின் கணவனே!

பூட்டிய நாணின் இறக்குதல் அறியாத வில்லைக் கொண்டோரான படைமறவர்கள், தம் அம்புகளைக் களைதல் எப்பொழுதென்பதனை அறியாதவராக இருக்கும், ஏணி இடப்படாது செறிந்து அசைகின்ற பாசறை இருப்பை உடையோனே! அளவிடப்படாத பெரிய எல்லையினையுடைய, பாசறைக்குரியவான இயல்பெல்லாம் பொருந்திய, பாசறையையுடைய குருசிலே!

நீரும் நிலமும் தீயும் காற்றும் வானமும் என்னும் ஐந்து பெரும்பூதங்களின் பரப்பின் அளந்து அவற்றின் முடிவை அறிந்தாலும், அளந்தறிதற்கு, இயலாத பெரும் ஆற்றலைக் கொண்டவனாக விளங்குவோனே! நின் வளமானது பெருகும் பெருக்கத்தை யாமும் இனிதாகக் கண்டோமே!

விளங்குகின்ற கதிரவனின் கதிர்கள் விரிந்து வானகமெங்கனும் ஒளிவீசி நிற்க, வடதிசைப் பக்கமாகச் சிறிதளவே சாய்ந்துள்ள சிறப்புப்பொருந்திய ‘சுக்கிரன்’ என்னும் கிரகமானது, பயன் பொருந்திய பிறவான கிரகங்களோடு மழை பெய்வதற்கு உரியதான நல்லநாளிலே பொருந்தி நிற்க, நீரைச் சொரியும் மேகத் தொகுதியோடு நாற்றிசையும் பொருந்தக் கவிந்து, உலகில் நிலைபெற்ற உயிர்களை எல்லாம் காக்கும் பொருட்டாக, வலமாக எழுந்து ஒலிக்கின்ற கீழ்க் காற்றால் கொணரப்பெற்ற தண்மையான நீர்த்துளிகளைக் கொண்டவும், நிறைசூலைக் கொண்டவுமான கரிய மேகங்கள், கார்காலம் எதிர்ப்படுகின்ற, தான் பெய்தற்குரியதான பருவத்தை மறந்து பெய்யாமற் போனாலும்,

உண்போரும் தின்போருமாக அளவோடு கொள்ளுதலை அறியாதவராய் மயங்கும்படிக்கு, ஒலிக்கும் பூண் மழுங்கிப் போன உலக்கையினாலே அரிசியைக் குற்றிச் சமையலைச் செய்கின்ற அடுக்களை இடந்தோறும், இலைகளோடும் கூடிய சேம்பின் கிழங்குகள் மேலெழுந்து துள்ளச் சமைத்தலையுடைய மிடாவினிடத்தே, வாளாற் கொந்திய சிவந்த