உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

151


என மூன்று பிரிவுகளைக் காண முடிகிறது. நகரமைப்பு இலக்கணப்படி ஒரு சிறிய நகரத்தின் சுற்றளவே பதினாறாயிரம் தண்டம் அல்லது 6,76,000 அடி ஆகும்.

நகரின் நான்கு திசைகளிலும் நான்கு எடுப்பான கோபுர வாயில்கள் இருக்க வேண்டும். மதிற்கூவர்களைப் பெற்றிருக்க (Walled city) வேண்டும் பல பொருள்களை வாங்கியும் விற்றும் வாணிபம் செய்யும் வணிகர்கள் பல ரைக் கொண்டதாயிருக்க வேண்டும். பலவகை மக்களுக் கான பல்வேறு தெருக்களும், வீதிகளும் நிறைந்திருக்க வேண்டும். பலவகைத் தெய்வங்களுக்கும் உரிய பல கோயில்களைக் கொண்டிருக்க வேண்டும். அத்தகுதிகள் உடையதே நகரம் எனப்படும். இனி ‘புரம்’ என்ற சிறப்புக்குரிய ஊர் எவ்வாறிருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. காடு அல்லது தோப்புக்கள் நிறைந்ததும் பலவகை மக்கள் வசிக்கக் கூடியதும் வணிகர்கள் நிறைந் ததுமாகிய நகரத்தைப் புரம் என்று கூறலாம்.

(உ-ம்.) காஞ்சிபுரம், சிங்கபுரம், கபாடபுரம், திரிசிரபுரம் .

சுற்றுப்புறத்திலே நதிகளாலும், மலைகளாலும் சூழப்பட்டு உழுதுண்டு வாழ்வோரும், தொழில் செய்வோரும் வசிக்கும் ஊர் கேடம் என்று அழைக்கப்படும், நான்கு பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்டு மக்கள் வாழ்க்கைக்குத் தகுதியுள்ள ஊர் கர் வடம் என அழைக்கப்படும்.

பட்டினம்-கோநகரம்

அயல் நாடுகளிலிருந்து இறக்குமதியான பல்வேறு பொருள்களை யுடையதும் பல திறப்பட்ட மக்கள் வாழ் வதும், வணிகர்கள் மிகுந்ததும், துறைமுகமுடையதும் கடற்கரை சார்ந்ததும், முத்து இரத்தினம், மணிகள்: பொற்காசுகள் புழங்குவதும் பட்டாடைகள் நிரம்பிக் கிடப் பதும் வெளிநாட்டு மக்கள் பலரும் குடியேறியுள்ள குடியிருப்புக்களை உடையதும் ஆன நகரம் பட்டினம் என்று சொல்லப்படும். 19