பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


பெரு நகரமாக விளங்கியது என்று சிலப்பதிகாரக் காப்பியம் கூறுகிறது.65

சிலப்பதிகாரம் இந்திரவிழவூரெடுத்த காதையில் பூத சதுக்கத்துப் பூதம் பற்றிக் கூறும்போது,

தவமறைந் தொழுகும் தன்மை யிலாளர்
அவமறைந் தொழுகும் அலவற் பெண்டிர் அறைபோ
கமைச்சர் பிறர்மனை நயப்போர்
பொய்க்கரி யாளர் புறங் கூற்றாளரென் கைக்கொள் பாசத்துக்
கைப்படு வோரெனக் காத நான்கும் கடுங்குர லெழுப்பிப்
பூதம் புடைத்துணும் பூத சதுக்கமும்66

என்று கூறப்படுகிறது. இதில் ‘காத நான்கும்’ என்பதற்கு அரும்பதவுரையாசிரியர் ‘ஊர் சூழ்ந்த நாற்காத வட்டகையும்'67 என்று பொருள் கூறியுள்ளார். அடியார்க்கு நல்லார் 'காத் நான்குமென முற்றும்மை கொடுத்தலானே ஊர் நாற்காத வட்டகை என்பதுணர்க' 68 என்று விளக்கியுள்ளார். இவற்றால் பூம்புகார் நகரின் பரப்பளவு நாற்காத தூரம் என்பது தெரிகிறது. இப்பொழுது காவிரிப்பூம் பட்டினத்தைச் சுற்றிலுமுள்ள க்ருவேந்த நாதபுரம், கடாரம் கொண்டான் என வழங்கும் ஊர்கள் பழைய காவிரிப்பூம்பட்டினத்தின் மேற்கு எல்லையாகவும், திருக் கடவூர் தெற்கு எல்லையாகவும், கலிக்காமூர் (அன்னப் பன் பேட்டை) வடக்கு எல்லையாகவும், கடல் கிழக்கு எல்லையாகவும் அமைய இந்நான்கு பேரெல்லைக்கு உட்பட்ட சிற்றுர்கள் அனைத்தையும் தன் அங்கமாகப் பெற்றிருந்தது பழைய காவிரிப்பூம்பட்டினம் என்கிறார் சதாசிவ பட்டாரத்தார்.69

மக்கள் தொகை

அன்றைய காவிரிப்பூம்பட்டினத்தின் மக்கள் தொகை பற்றி அறிய நேரிடையான சான்றுகள் இல்லை எனினும்