பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

193



எதிரிகள் தலை சிதறுமாறு இரும்பு உலக்கைகளை வீசும். புலிப் பொறிகள் பகைவரை அமுக்கும். குதிரைப் பொறிகள் எதிரிகளின் மார்பு எலும்புகள் முறிய உதைக்கும். அவர்களை அகழியில் வீழ்த்தும். பேய்ப் பொறிகள் தீயுமிழும். சில பொறிகள் ஈயத்தை உருக்கி ஊற்றும். வறுத்த மணலைக் கொட்டும். கனமழை பொழியும்.

இத்தகைய பொறிகள் மதுரை நகர மதிலிடத்தே இருந்தன. இப்பொறிகள் யாவும் யவனர் வினைத்திறத்தால் இயற்றப்பட்டவை என்றும் கூறப்பட்டுள்ளமை புலனாகிறது.34

“இத்தகைய பொறிகள் அமைந்த மதில்கள் நெடியவையாயிருந்தன-எதிரிகள் தாக்க முடியாதவையாயிருந்தன. சுரங்க வழியுடையவையாய் இருந்தன. வானுற ஓங்கி நிமிர்ந்தவையாக இருந்தன. கோட்டை வாயில் நிலைகள் நெடிதுயர்ந்தவையாயும், திண்ணிய பெரிய கனமான கதவுகளையுடையவையாயும் இருந்தன.35

"அம்மதிலின்மீது கட்டப்பட்டிருந்த மாடங்கள் மேகங்கள் படர்ந்த பெரிய மலை முகடுகள் போல் ஓங்கியிருந்தன. மக்களும் பிறவும் இடையறாது சென்று வருதலால், கோட்டை வாயில் இடையறாத நீரோட்டமுடைய வையை ஆற்றை ஒத்து உயிரோட்டமுள்ளதாயிருந்தது.36"

மதில்களின் அமைப்பில் காணும் இப்பொறியியல் நுணுக்கங்கள் தமிழர் நகரமைப்பில் இருந்திருக்கும் பாதுகாப்பு ஆயத்த நிலைக்குச் (Defence Preparedness); சான்றாகும்.

நகரின் அமைப்பு

புற நகருக்கு அப்பால் மதிலையும் கடந்து அகநகருக்குள் மிகவும் அகலமான பெரிய தெருக்கள் அமைந்திருந்