உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

195



இதனால் நக்கீரர் பாடிய காலத்தில் இன்றைய அவனியாபுரம் பகுதியே மதுரையின் நகர் நடுப்பகுதியாக இருந்திருக்கக்கூடும் என்றொரு கருத்தும் உண்டு. ஒரு வேளை அவனியாபுரமே நடுவூர் என்னும் அகநகர்ப் பகுதியாயிருந்திருக்கக் கூடும்.

மதுரை நகரின் கட்டடங்களின் உயரம், புதுமை, செல்வ வளம், கோட்டைச் சிறப்பு இவ்வளவையும் ஒரடியிலேயே இணைக்கிறது திருவிளையாடல்.

... ... ... மதி தபழு
சுதை யிலகு புதுமைதரு நிதிதிகழு மதில்தழுவு மதுரைநகரே44

மதுரையைப் பற்றிப் பேசும் எல்லா இடங்களிலுமே, அதன் கோபுரம், மாடங்களைப் புகழுவது ஒரு சீராக வருகிறது.

திதமுறு மதுரையந்தண்45
அலகில் வண்புகழுடைய மதுரை46
வாரிஎற்றி முன் மதிப்படை பொருவது வைகை47
பெருங்கடல்சூழ் வையத்தைந்து நிலத்தோங்கு
நகர்கட் கெல்லாம் பயனாய் நகர் பஞ்சவன்தன் மதுரைநகர்48
நீள வளர் பொற் கோபுரம் வானிலவும் வெள்ளி ஒளிமன்றம்49

பரந்து ஒடும் பெரிய அகன்ற ஆறு போல் அத்தெருக்கள் தோன்றின.

மதுரை நகரத் தெருக்களின் வீடுகள் தென்றல் காற்று வழங்கும் பல சாளரங்களையுடையவையாயிருந்தன என்கிறது மதுரைக் காஞ்சி.

வகைபெற எழுந்து வான மூழ்கிச்
சில்காற் றிசைக்கும் பல்புழை நல்லில்
யாறு கிடந்தன்ன அகல்நெடுந் தெருவில்