பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

83

.

படைக்கலங்களும் தேர்களும மாட மாளிகைகளும் செய்து கொடுத்து வாழ்ந்தனர்.

ரோகமபுரி கடல்கோளுக்குட்பட்டு அழிந்தபோது அந்த மரபினர் பலர் தப்பிப் பிழைத்து மீண்டும் ஆரியா வர்த்தத்தை (பாரத நாடு) அடைந்தனர் என்பது வரலாறு.72

மனை நூலில் உள்ள விவரங்களில் பெரும் பகுதி நம்பிக்கைகள், சோதிட விவரங்களாகவே அமைந்துவிடினும் மண் பரிசோதனை தொடங்கி வேறு பல கட்டடக் கலைக் கூறுபாடுகள் தெளிவாகவே விளக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில நம்பிக்கைகள், வழக்கங்கள் என அமையினும் பல அறிவியற் கூறுபாடுகளோடு பொருந்திவர எக்காலத்துக்கும் ஏற்றவையாகவே விளங்குவதைக் காண்கிறோம்.

மன நூலைப் பதிப்பித்துள்ள அறிஞர் பூ. சுப்பிரமணியன் அவர்கள் இது பற்றித் தமது முன்னுரையில் கூறும் போது, மண் கட்டட வேலை தொடங்கும் முன்பே சோதிக்கப்பட வேண்டும். இது தொடர்பாகப் பல முறைகள் கூறப்பட்டுள்ளன. மனையில் குழி அகழ்ந்து அதே மண்ணால் குழி நிரம்புகிறதா இல்லையா என்று பார்க்கும் முறை ஒன்று. முன் மாலையில் குழியில் நீரை நிரப்பி அது வற்றுதல் வற்றாமை, சேறு முதலியவற்றை மறுநாள் காலை பார்த்து முடிவு செய்வது மற்றொரு முறை மண்ணின் வலிவை இம்முறை மூலம் நன்கு பரிசோதித்து விட்வும் கட்டடத்தைத் தாங்கும் ஆற்றல் அம்மண்ணுக்குண்டா என்பதைக் காணவும் இது பயன்படுகிறது.

நிலம் நல்லதா கெட்டதா என அறியவும் மற்றொரு முறை பயன்பட்டது. ஒரு வட்ட வடிவமான குழி அகழ்ந்து நீரூற்றி அதில் மலரை இட்டு அம்மலர் எப்படி நகருகிறது என்பதைக் கொண்டு விளைவறியும் முறை இந்நூலில்