பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள்' ஆசிரியர், செந்தமிழ்ச் செல்வர் உயர்திரு. கி. வா. ஜகந்நாதன் அவர்களின் முன்னுரை பாரத நாட்டிலே இராமபிரானுடைய கதை பரவி யிருப்பதைப் போல வேறு எந்தக் கதையும் பரவவில்லை. இராமனுடைய பண்பும் வீரமும் கருணையும் எத்தனை தடவை கேட்டாலும் படித்தாலும் அலுக்காதவை. மகாத்மா காந்தியின் கதையும் அதுபோலவே பாரத நாட்டு மக்களின் உள்ளத்தைக் கவரும் கதை. நிச்சயமாக இது நாளடைவில் இராமன் கதைக்குச் சமானமாக இந்த நாட்டில் பரவி மதிக்கப் பெற்று விளங்கப் போகிறது. காந்தி மகானுடைய கதையை வருங்காலப் பரம்பரை யினராகிய குழந்தைகள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். உலகத்திலுள்ள பல்வேறு மொழிகளில் காந்தி மகானுடைய கதை வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டுக் குழந்தைகள் தெரிந்துகொள்வதோடு மட்டும் அல்ல; அடிக்கடி நினைப்பூட்டிக் கொள்ள வேண்டுமானல் கதை பாட்டு வடிவில் இருக்கவேண்டும், அன்பர் அழ. வள்ளியப்பா இந்த அரிய பாட்டிலே காந்தி கதை' என்ற நூலைக் குழந்தைகளுக்காகவே இயற்றியிருக்கிருர். குழந்தைகளுக்காகப் பல பாடல்களைப் பாடிக் குழந்தைக் கவிஞர் என்று தமிழ் மக்கள் அன்புடன் பாராட்டும் நிலையில் இருப்பவர் இவர். குழந்தையின் உள்ளப் பாங்கை நன்கு அறிந்து, அவர்களுக்கு எளிதில் விளங்கும் சொற்களை ஆண்டு, சிறிய சிறிய வாக்கியங்களை 7