உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளையர் வெளியேறினர் ! பாரத புண்ணிய பூமியினைப் பாகப் பிரிவினை செய்த பின்னர், கோரிய வண்ணம் சுதந்திரத்தைக் கொடுத்திட வெள்ளையர் முடிவுசெய்தார். அருமைத் தலைவர்கள் கைகளிலே ஆட்சிப் பொறுப்பினை ஒப்படைத்தே, திரும்பினர் ஊருக்கு வெள்ளையர்கள்; தேசம் மகிழ்ந்திடச் செய்தனரே. மக்களுள் மாணிக்கம் நேருஜியும், மதிநுட்பம் மிக்ககம் ராஜாஜியும், பக்க பலமாக ராஜன்பாபு பட்டேலுடன் பொறுப் பேற்றனரே ! 137