பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகமே போற்றிடும் உத்தமரை, ஊருக்கு கித்தம் உழைத்தவரை, கலகமே வேண்டாம் என்றவரை, கயவன் சுட்டுக் கொன்றுவிட்டான்! எங்த மதத்தையும் ஒன்றெனவே எண்ணி மதித்திடும் காந்தியினை இந்து மதத்தின் விரோதியென் ஏனுேதான் பாதகன் எண்ணி விட்டான் ! எங்கும் கிடைக்காத பொக்கிஷத்தை இந்திய தேசம் இழந்ததையோ! பொங்கி வழிந்திடும் கருணையினைப் பூவுல கெல்லாம் இழந்ததையோ! கடவுளைத் தொழுதிடக் கூடிகின்ருேர் காங்தி இறந்ததைக் கண்டதுமே, துடிதுடித் தழுத காட்சியினைச் சொல்லிட இங்கே வார்த்தையில்லை. ஐயன் மறைந்ததைக் கேட்டதுமே அதிர்ச்சி அடைந்தனர் மக்களெல்லாம். கையைப் பிசைந்து திகைத்தனரே, கண்ணிர் விட்டுக் கதறினரே. 145 3 : 35-13