உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டும் கதையும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மான்குட்டி போன்றவளை - நான் மணம் செய்துகொள்ள விரும்புகிறேன் வீண்பேச்சுப் பேசாதே" - என்று விலங்குக்கரசன் மிரட்டி நின்ருன். “காட்டு விலங்கனைத்தும் - நடுங்கக் கர்ச்சனை செய்கின்ற காவலனே! மாட்டேன் என்று சொல்லி-இந்த மண்ணில் நானும் பிழைப்பேன? கூரிய கால்நகமும் - உங்கள் கொடுவாய்ப் பற்களும் கண்டுமகள் நேரில் வருவதற்கே - மிக நெஞ்சம் அஞ்சி நடுங்குகிருள். கூரிய பற்களையும் - குத்தும் கொடுவாள் போன்ற நகங்களையும் வேருடன் பிடுங்கிவிட்டால் - உம்மை விருப்ப முடன்அவள் மணந்துகொள்வாள்.” என்றுசொன் ஞன்கிழவன் - சிங்க ஏறும்தன் பற்கள் நகங்களையும் அன்றே பிடுங்கிவிட்டு - முன்னுல் - ஆசையுடன் வந்து நின்றதுவாம். 51