பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் தேசியம் -அ. சீனிவாசன் 44 தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவு வகை செய்தல் வேண்டும். தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்ய வேண்டும். உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்று புத்துணர்வு பெற்று எழுந்து நிற்கிறார். வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு, இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க, நன்மை வந்தெய்துக, தீதெலாம் நலிக. அறம் வளர்ந்திடுக, மறமடிவுறுக! வந்தேமாதரம் வந்தே மாதரம் என்று கூறி அன்னையை நினைந்து ஆவேசம் கொள்கிறார். -്. <<= ~ 크. ~ 三ン-P