பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. பாரத பூமி பழம்பெரும் பூமி பாரத பூமி பழம் பெரும் பூமி நீரதன் புதல்வர் இந் நினைவ கற்றாதீர், பாரத நாடு பாருக்கெல்லாம் திலகம் நீரதன் புதல்வர் இந்நினைவ கற்றாதீர் என்று நெடிது நோக்குடன் மகாகவி தனது சிந்தனையைச் செலுத்துகிறார். வெகு தூரத்துக் காட்சிகளெல்லாம் தனது கண்ணுக்குப் புலப்படுகின்றன. பாரத மண்ணில் தோன்றி பாரதத்திற்கும் உலகிற்கும் வழி காட்டிய வாழையடி வாழையாக வந்த பல மகரிஷிகள், மாமுனிவர்கள், சித்தர்கள், சான்றோர், தவத்திற் சிறந்தோர், பெரும் புலவர்கள், பேரரசர்கள், மாவீரர்கள், அரசியல் அறிஞர்கள், அறிவியல் மேதையர், மற்றும் மேலோர் பலரும் கவிஞனின் கண்களுக்குப் புலப்படுகின்றனர். வியாச பகவானும், அகத்தியனும், வசிட்டனும் வாம தேவனும், விஸ்வாமித்திரனும், பரசுராமனும், பீஷ்மனும், துரோணரும், வால்மீகியும், கம்பனும், ஒரு பக்கம் இராவணனும் இந்திரசித்தனும், கும்பகருணனும், அதிகாயனும், அட்சயகுமாரனும் மறுபக்கம் இராம பிரானும், இலக்குவனும், பரதனும், குகனும், சுக்கிரீவனும் வீடணனும், சஞ்சீவி மலையைப் பெயர்த்து வந்த மாவீரன் சொல்லின் செல்வன் ஆஞ்ச நேயனும், காண்டீபனும், கர்ணனும், பீமனும் மற்ற வீரர்களும் பாரத தேசத்தின் குல தெய்வமான கண்ணபிரானும் மகாகவியின் கண்களுக்குக் காணப்படுகிறார்கள். சீதாபிராட்டியும், பாஞ்சாலியும் கண்ணகியும், அருந்ததியும், பாரதியின் கண்களுக்கு முன் காணப் படுகிறார்கள். பாரதப்