பக்கம்:பாற்கடல்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

115


இல் நீந்திக்கொண்டேயிருக்கின்றன. வெளிப்பட்டவைக்கு அழிவேயில்லை. காத்துக்கொண்டிருக்கின்றன.

எதற்கு?

பின்னர் ஒருநாள்—

கடலோரம் கிளிஞ்சல்
நதியோரம் கூழாங்கல்
வயலோரம் நத்தை முத்து
பாதை வழியில் குந்துமணி

குழந்தைகள், புதுக்கண் விழிப்பில் கண்டெடுப்பது போல்.

கவியென்றும், கதகன் என்றும், காயகன் என்றும், நாடோடியென்றும்,

கண்ணப்பன் முன் சுவைத்து என்னப்பனுக்கு முன் ஊட்டிய நிவேதனமென,

இப்பதங்களை, சொற்களை, ஓசைகளைத் தன்தன் ஈடுபாட்டுக்கேற்பத் தேர்ந்தெடுத்து ஆரம் தொடுத்து நம் முன் வைக்கையில்,

அதை நாம் அடையாளம் கண்டுகொள்கையில், ”ஆ! ஈதென்ன? இப்படித்தான் என் நெஞ்சில் இருந்ததை நான் சொல்லவல்லாமல், இவன் எப்படி என் நெஞ்சில் இருந்ததை என் நெஞ்சிலிருந்து பிடுங்கச் சொல்லி விட்டான்?” என்று வியக்கையில், கூச்சமுணர்கையில், அச்சுறுகையில், தேறுதல் கொள்கையில், உள்ளுணர்வு ஆசி கூறுகையில் அந்த எழுத்து, (எழுத்து என்பது வெளியீட்டின் ஒரு வகைதானே?) எழுதியோன், வாசகன் மூவரும் அந்தச் சமயத்தின் ஆசியைப் பெறுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/121&oldid=1533973" இலிருந்து மீள்விக்கப்பட்டது