பக்கம்:பாற்கடல்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

லா. ச. ராமாமிருதம்


”எமனும் எங்கானும் பிறந்துதானே ஆகணும்?” கேள்வி என்னவோ சிறிசு ஆகத் தோன்றுகிறது. ஆனால் அதன் இடையே என்னென்னவோ ‘‘வே’’று கேள்விகள் கண்ணாமூச்சி விளையாடுகின்றன.

"நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தாற்போல."

"அந்த அம்மாள் அவங்க கையாலே மண்ணைக் கிள்ளிக் கொடுத்தாலும் போதும், மருந்தாக மாறிடும். மருந்தில்லாட்டி பொன். குங்குமத்தை இழந்துட்டாலும் அழிஞ்ச களையே இல்லை, குளிச்சிட்டு வந்த களைதான்.”

”குரலில் எப்படி கிளி கொஞ்சுது பாத்தியா?”

இன்னும் சொல்லிக்கொண்டே போவேன். ஆனால் ஒரே சமயத்தில், அந்த அந்தச் சந்தர்ப்பங்களிலிருந்து பிரித்துத் தனிப்படச் சுவைக்கையில் திகட்டினால்?.

ஆனால் அறிந்தும், அறியாமலும், மானாவாரியாக பவழமல்லி, வேப்பம்பூ, பூவரசு உதிர்ந்து தரைக்கு ஜமக்காளமிடுவது போன்று, சொற்கள், பதங்கள், ஓசைகள் ('வே') தெள்ளுமணிகள் தம் வாயிலாகவும் வாக்காகவும், தம் மாண்பில் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. மலர்களின் நளினங்கூட அறியாமல், அவற்றை மிதித்து, அவற்றின் விரிப்பின் மேலேயே நடந்து செல்கிறோம்.

இவற்றில், வட்டாரத் தனிக் கமழ்ச்சி வேறே.

இவை, உடனேயோ, பின்னரோ மறதியில் புதைந்தோ அல்லது வெவ்வேறு சந்தர்ப்பங்களில், நாக்குக்கு நாக்கு வழிவழியாகச் சுழன்று, வெவ்வேறு மணங்களும் நிழல்களும் கூடி, மிச்ச நேரத்துக்கு, Ether

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/120&oldid=1533972" இலிருந்து மீள்விக்கப்பட்டது