பக்கம்:பாற்கடல்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

113


ஆகவே புரிந்தாலும் புரியாவிட்டாலும், பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் படித்ததனாலாய பாதிப்பு கண்டபின், வாசகனின் பொறுப்பு, எழுதினவனுக்குக் குறைந்ததல்ல என்பது என் கருத்து.

இந்த அடிப்படையில் நான் சொல்ல வருவது இதோ:

தினப்படியே உவமைகளும் குறியீடான உணர்த்தல்களும் என்னமாக வாழ்க்கையை ஆள்கின்றன ! வசையுடனேயே ஆரம்பிக்கிறேன்.

“டேய் பொறுக்கி!” “என்னத்தை” என்று கேட்கிறோமா?

"டேய் குரங்கே " (நாம் குரங்கிலிருந்து வழி வந்திருக்கலாம். ஆனால் இப்போது குரங்காக இல்லை. குரங்கைப் போல என்றுதான் அர்த்தம்)

"நான் பொறுக்கி, இவர் மேருவாக்கும்!” (ஸ்வாகதம். ஆனால் உவமையை கவனிக்க)

"என் கண்ணே! கற்பகமே! ராஜாத்தி!” இது ஒரு குடிசையில், தன் பிள்ளைக் குழந்தையைக் கொஞ்சும் ஒரு தாய். 'அத்தனையும் பொய்' என்று எதிர்க்குரல் எழுப்ப யாருக்கேனும் தைரியம் இருக்கிறதா ? அத்தனையும் அன்பு சுரந்த கவிதை.

”அவரை போட்டால் துவரை முளைக்குமா ?”

”டிபன் நேரத்துக்குத் தவறாமல் எப்படியோ வந்து விடுகிறான். எப்படித்தான் மூக்கில் வேர்க்கிறதோ?” "தாய் பத்தடி பாஞ்சால், குட்டி பதினாறடி துப்பாக்கி வயிற்றில் பீரங்கி!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/119&oldid=1533971" இலிருந்து மீள்விக்கப்பட்டது