பக்கம்:பாற்கடல்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

லா. ச. ராமாமிருதம்


தென்றல் வீசுகிறது. கதவுகளை மூடாதீர்கள்.

ஸம்ஸ்கிருதத்தில் ஸிம்ஹம், ஆப்பிரிக்காவில் ஸிம்பா.

ஸிம்ஹத்திலிருந்து ஸிம்பாவா?

ஸிம்பாவிலிருந்து ஸிம்ஹமா?

ஆராய்ச்சி, யாருக்கு முதல் தாம்பூலம் என்று பிரச்சினையை வளர்ப்பதற்கல்ல.

பூமத்திய ரேகைபோல், பாஷை மக்களை எப்படி வளைத்துக் கட்டிக் கொண்டிருக்கிறது என்பதில் வியப்புறத்தான்.

சரி, கதையென்றும், கவிதையென்றும், ஞானமென்றும், விஞ்ஞானமென்றும், பண்பென்றும் மொழியின் பெருமையை அறைகூவிக் கொண்டிருக்கிறோம். இன்னும் அலுக்கவில்லை. அலுக்கப் போவதில்லை.

ஆனால் வாய்மொழி தாண்டி, பேசாத மொழியென்று ஒரு கட்டம் இருக்கிறது. மொழி நோக்கம் வெளியீடு எனில், அந்த வெளியீடு குறிப்பாலேயே நடப்பது.

வெளியீட்டுக்கு ஆங்கில வார்த்தை Communication (com+uni) சேர்ந்து+ஒன்று) அதாவது பல, ஒன்றாதல். ஆகவே புரிவதுதான் பாஷையின் குறிக்கோளே தவிர பேச்சு அல்ல.

குறிப்பால் உணர்த்தலை கிராமத்தில் பட்டினத்தைக் காட்டிலும் அதிகம் பார்க்கலாம். இயற்கையின் விசாலத்தில், பரந்த மைதானங்களிலும் ஆகாய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/128&oldid=1533980" இலிருந்து மீள்விக்கப்பட்டது