பக்கம்:பாற்கடல்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

123


வெளியிலும் அகன்ற வயற்புறங்களிலும் மனிதன் இழைந்துவிடுவதால் பேச்சு தானே அடங்கிவிடுகிறது.

பிள்ளைப் பருவத்திலே, கிராமத்தில் என் தகப்பனார் வாத்தியார் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, எங்கள் வீட்டுக்கெதிர் வீட்டில் ஒரு முதலியார் வசித்து வந்தார். நாங்கள் குடியிருந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் கைக்கோள முதலியார். நெசவுத் தொழில்.

ஐயாவும் அம்மாவும் பிரம்மோற்சவத்தின் போது ஸ்வாமிக்கு முன் செல்லும் பூதப் பொம்மைகள் போன்று இருப்பார்கள்.

முதலியார் விடிகாலையில், கழனிக் காட்டைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிப் போய்விட்டு - பத்து பத்தரைக்குத்தான் திரும்பி வருவார். நுழையும்போதே உறுமலுக்கும் மூக்கு உறிஞ்சலுக்குமிடையாக ஒரு தனிச் சத்தம் அவரிடமிருந்து வெளிப்படும். அவர் மனைவி அது கேட்டுப் பதறிக் கிணற்றடிக்கு ஓடி, தவலையில் தண்ணிர் கை கால் கழுவக் கொண்டுவந்து வைப்பாள்.

உடலைச் சுத்தம் செய்துகொண்டு, இது ஸ்னானம் அல்ல, திருநீறு தரித்து, முதலியார் தறியில் இறங்குவார். சற்று நேரம் பொறுத்து அதே உறுமல். எங்கிருந்தாலும் அந்த அம்மாவுக்கு எப்படித்தான் காது கேட்குமோ? ஆவி பறக்க ஒரு கையில் கஞ்சியும், ஒரு கையில் தம்ளருமாய் ஓடி வருவாள்.

அல்லது, பாவில் அறுந்துபோன இழையை நிமிண்டுவாள். பேச்சுக்கோ, தர்க்கத்துக்கோ நேரம் கிடையாது, நெசவுத் தொழிலில், அதுவும் தறியில் இழை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/129&oldid=1533981" இலிருந்து மீள்விக்கப்பட்டது