பக்கம்:பாற்கடல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

11


நானே பார்த்தேன். டில்லியில் பாலத்தின் மேல் ரயில் போய்க்கொண்டிருக்கையில் சுழிப்பில் தண்ணிரே ஓட்டை விட்டுக்கொண்டது. கடையல் ஓய்ந்தபின் தெளிவு. அந்தத் தெளிவில் திரண்டு வந்திருப்பது என்ன? அவ்வப்போது நாட்டில் கலாச்சாரம் சரித்திர ரீதியாகத் தனித்தனியாகவும் ஒரு மக்களாகவும் நாம் அடைந்திருக்கும் பண்பின் எடை

ஒன்று சொல்ல வேணும். இந்த நாள் எழுத்தின் உற்பத்திக் கொழிப்புக்கு எங்கள் தலைமுறை ஒருநாளும் ஈடு கொடுக்க முடியாது. அப்பப்பா, அசுர சாதகம். இந்தச் சாதக விளைவுதானோ என்னவோ கதை சொல்லும் உத்தி, பாஷையின் பாணி எல்லாம் ஓர் அதம தரத்தில் ஓடுகின்றன, முறைகள் வலுத்துவிட்டன.

விஷயம். விஷயம் ?

வெகுநாட்களுக்கு முன் ஓர் எழுத்தாளர் வீட்டுக்கு வந்திருந்தார். இப்படி வருவார்கள் போவார்கள். என்னத்தையோ எதிர்பார்த்து வந்தவர்கள் ஏமாந்து போவார்கள். எதிர்பாராமலே வந்தவர்கள் எனக்குப் புது நண்பர்கள் ஆவார்கள். எழுத்து உறவில் எனக்குக் கிடைத்த மதிப்பில்லா லாபம் இதுதான். இன்னமும் அந்த அதிர்ஷ்டம் இருந்துகொண்டுதாணிருக்கிறது. நிற்க. (சபாஷ்! ஆனால் அதிகமாகத் தலை நீட்டுகிறாப்போல் தோன்றுகிறது. இத்தோடு தலையை வெட்டிவிட வேண்டியதுதான்!)

"சார் இதைப்பற்றித்தான் எழுதணும்னு கண்டிஷன் உண்டா என்ன? நான் எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதுவேன்.”

"தாராளமா” எந்த வகையில் இவரைக் கோவப்படுத்திவிட்டேன்? நான் ஒரு பயங்கொள்ளி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/17&oldid=1532905" இலிருந்து மீள்விக்கப்பட்டது