பக்கம்:பாற்கடல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

லா. ச. ராமாமிருதம்


திடீரென்று நினைத்துக்கொண்டாற்போல் "ஆபீஸில் டைப் அடிக்கிறேன். என் டைப்ரைட்டரைப் பற்றி எழுதுவேன்."

"நல்லது நல்லது”நான் ஒரு பஹுத் பயங்கொள்ளி.

“ஸார், நான் என் டைப்ரைட்டர்மேல் காதல் கொண்டிருக்கிறேன். செல்லப் பெயரால் ரஹஸ்யமாக அழைப்பேன். அதன் தட்டுகளைத் தொடும்போதெல்லாம் எனக்கு உடலும் உள்ளமும் கூச்செறிகின்றன. தட்டும் எழுத்துக்கு எழுத்து ஸிலிண்டர் நகரும்போது என்னோடு தட்டம்மா பேசுகிறாள். ஆபீஸுக்கு வந்ததும் உறையைக் கழற்றுகிறேன். நாணமுறுகிறாள். முதிர முதிர நாணம் கலைகிறாள். வீட்டுக்குப் போகும்போது உறையைப் போடுகிறேன். மெளனமாக விடை பெறுகிறோம். "நாளை சந்திப்போம்."

நள்ளிரவில் விழிப்பு வந்ததும்,

ஆபீஸ் அறையில் தனியாக அவள், மறுநாள் என் வரவுக்காகக் காத்திருப்பதை எண்ணுகிறேன். ஆறுதல் கொள்கிறேன். இப்படி ஏன் எழுதக்கூடாது?”

நன்றாய்த்தானிருக்கிறது. ஏன் எழுதக்கூடாது? மகளே உன் சமர்த்து. கொண்டையுள்ள சீமாட்டி சீவி முடிந்துகொண்டாலும் அழகுதான். ஜடை பின்னிக் கொண்டாலும் அழகுதான். மதுரை மணியின் ஸ்வரப் ரஸ்தாரம் (மனிதா, 'மதனி' தோடி ராகத்தில் ஒரு முறை அசந்துபோனேன்)

ஆனால் அந்த நாளில், என்னுடைய அனுபவக் குறைவில், விஷய அஞ்ஞானத்தில் நான் நினைத்ததுண்டு; சதை, தசை, உடல், அதன் மேடுபள்ளங்கள், கவர்ச்சி, பேச்சு, சாஹஸம் இத்தனை சவால்களுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/18&oldid=1532906" இலிருந்து மீள்விக்கப்பட்டது