பக்கம்:பாற்கடல்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

323


இவாள்லாம் இப்படி அமர்க்களப்படுத்துவதால், எனக்கு லேசா பின்மண்டையில் வலிக்கிற மாதிரி இருக்கோ?

உண்மையிலேயே வலிக்கத்தான் செய்தது. பின் மண்டையில் 'சுருக் சுருக்' - அந்த அடிக்கு அதாவது இருக்க வேண்டாமா? தூக்கம் வரவில்லை. படுக்கையில் புரண்டு உருண்டேன். ஊஹும் - முனகலாமா? இல்லை. மன்னியும் அம்மாவும் பேச்சுக்குரல் கேட்கிறது. அவாளுக்கும் தூக்கம் வரல்லே போலும். விடி விளக்கில் உட்கார்ந்து கொண்டு அவர்கள் நிழல் உருவம் (Silhouette) தெரிந்த்து.

“அம்மாப் பொண்னே! குழந்தைக்கு நேரக்கூடாதது நேர்ந்திருந்தால் என்னடி பண்ணுவோம்?”

“நாம் என்னத்தைப் பண்ணுவோம்? வரத்தைப் பட வேண்டியதுதான்.”

“என்னடி அவன் என்னமோ விகடம் பண்ணறான்! நீ விட்டேத்தியாப் பேசறே! எவ்வளவு பெரிய பழி பாவத்துக்கு ஆளாகியிருப்பேன்? அப்புறம் என் கதி என்ன ? மெனக்கெட்டுக் குழந்தையை அடுத்த தெருவுக்கு அழைச்சுப் போய் நான் யமனாக முளைக்க இருந்தேனடி?”

“ஒரு சுந்தரம் சுப்ரமணியம் போனதுக்கு மேலேயா மன்னி? பத்தே நாளில் இரண்டுபேரையும் பறி கொடுத்துட்டு உசிரோடு பாவி நான் இன்னும் இல்லையா?” அம்மா சட்டென மன்னி மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/329&oldid=1534455" இலிருந்து மீள்விக்கப்பட்டது