பக்கம்:பாற்கடல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

49


பலம் என்பது என் பெருமிதம். ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாமலே பரஸ்பர உறவு வளர்க்கும் ஆன்ம சக்தி, எழுத்தைக் காட்டிலும் எது? இசை, ஓவியம் போன்ற கலையின்பங்கள் மற்றவர்க்குச் சேர அதனதற்குரிய புலன் நுகர்ச்சி தேவைப்படுகிறது. எண்ணத்துக்கு அடுத்தது எழுத்துதான்.

எழுத்தறிவித்தவன் இறைவனாகும். பரம்பரையின் அழியாச்சுடர். அதற்கு நான் பிதாமகனா ? அடியம்மாவ்!

நாம் யாவருமே அமுதகலசத்தின் வம்சவழி. அழியாத்தன்மைக்குக் குறிக்கப்பட்டவர்கள். தெரிந்தோ, தெரியாமலோ, அழியாத தன்மைக்கு அர்ப்பணமானவர்கள். தெய்வமே ஒரு குறிக்கப்பட்ட பொருள்தான். தட்டிவிட்ட சாரம்தான் நம்மை வழி வழியாகத் தாங்கிவரும் தவபலம்.

இந்தத் தர்க்கப்படி, கோபுரத்தை பொம்மைதான் தாங்குகிறது.

"தட்டிவிட்ட சாரமா? அது என்ன?” - உறுமல் கேட்கிறது.

நம்பிக்கைதான். ஏதோ ஒன்றன்மேல் நம்பிக்கை, அது தெய்வமோ, குழந்தையோ, நம் மூதாதையர் நமக்காக வகுத்துவிட்டுச் சென்றிருக்கும் வழியோ, அசட்டு கெளரவமோ, வறட்டு ராங்கியோ...

அந்த நாளில் கண்ணன் கோவர்த்தனகிரியைச் சுண்டுவிரலில் ஏந்தினான் - இது கண்ணன் மேல் நம்பிக்கை.

நடராஜன் ஒற்றைக்காலில் கட்டைவிரல் நுனியில் தான் ஆடுகிறான். அந்த வேகமே சமயங்களில் தாங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/55&oldid=1533251" இலிருந்து மீள்விக்கப்பட்டது