பக்கம்:பாற்கடல்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

லா. ச. ராமாமிருதம்


முடியாமல் குவலயமே குலைகிறது. பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள்) - இது நடராஜன் மேல் நம்பிக்கை.

ஒன்றையொன்றன் ஈர்ப்புசக்தியின் கடையலில் கிரஹங்கள் கவிழாமல் அந்தரத்தில் இயங்கும் விஞ்ஞான உண்மையில் மேற்கூறிய இரு நம்பிக்கைகளும் சித்தாந்தங்களும் நிரூபணையாகின்றன.

நம்பிக்கைமேல் நம்பிக்கை, நம்பிக்கையின்மைமேல் நம்பிக்கை - ஊம், ஆமாம், ஜாபாலி நியாயத்துக்கும் நம் சித்தாந்தம் இடம் கொடுக்கிறதே!

நான் தொட்டதெல்லாம், இப்பவே, அத்தனையும் எனக்கே - என்கிற கொள்கையில்தான் மோசம் போகிறோம். சுயநலம்தான் நம்பிக்கை துரோகத்துக்கு வித்து. மாஞ்செடி முளைக்கச் செய்தல், கழைக்கூத்தாடி நமக்குக் கொஞ்சநேரம் பொழுது போக, நம்மிடமிருந்து காசு பறிக்க, காட்டும் கண்கட்டு வித்தையோடு சரி.

நம்பிக்கை எங்கள் பாட்டன் சொத்து. நானே எனக்குச் சொந்தமல்ல - நான் எங்கள் பாட்டன் சொத்து. நான் என்றால் நீயும்தான்.

தொன்றுதொட்ட இந்த வாழையடி வாழை நம்பிக்கையின் அடிவழியில் என் தகப்பனார், இந்தக் கோயில், பெருந்திருதான் நம் சொத்து என்று உருகியதில் என்ன ஆச்சரியம் ?

இந்தத் தட்டிவிட்ட சாரம்தான் நம் சமுதாய பலம். இதிஹாஸ காலத்திலிருந்து ஓங்கி வளர்ந்திருக்கும் அதன் பண்பு. கட்டடம் எல்லாமே.

பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம். பக்குவம் பார்க்க எனக்கு ஒரு சோறு எங்கள் குடும்பம் – என்றால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/56&oldid=1533252" இலிருந்து மீள்விக்கப்பட்டது