பக்கம்:பாற்கடல்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

63


கறுப்பண்ணன்
    எக்காலும் துணைக்கு வருங்காண்”

பிரதி இரவும் மன்னிப்பாட்டி மேற்கூறிய இரு பாக்களையும் சொல்லி எங்கள் படுக்கைக்கு இரு தெய்வங்களையும் காவல் வைத்துவிடுவாள்.

னால், தாத்தா, வாளாடி வழியில் வகையாக மாட்டிக்கொண்டார் என்பது தவிர, சுபாவத்தில் பயந்தாங்கொள்ளி - இன்னொரு தினுசில்.

கொல்லைப்பக்கம் போய் வருவார்.

”ஏய்!” (இது அந்தக் காலத்துத் தோரணை) காலில் என்னவோ சுருக்குன்னுது. ரெண்டு மிளகு கொண்டுவா!”

“செருப்புப் போட்டிருக்கேள். எப்படி சுருக் கென்னும்?”

“கொண்டுவான்னா கொண்டுவா! தர்க்கம் பண்ற சமயத்தைப் பாரு!” (கொண்டுவந்து கொண்டேதான் மன்னிப்பாட்டி கேட்கிறாள் பாவம். என்றுமே இடிசொல் படுவதற்கென்றே வாழ்க்கைப்பட்டவள்)

”என்னடி தித்திக்கிற மாதிரியிருக்கு, விசுவநாதஞ் செட்டியை அழைச்சுண்டு வா. காலில் விறுவிறுன்னு ஏர்ற மாதிரியிருக்கு; முழங்காலுக்கு வந்துடுத்து.” கண்டசதையைக் கிள்ளிப் பார்த்துக்கொள்வார்.

செட்டி வந்து நாடியைப் பார்ப்பான். ”நீங்கள் சொல்றபடியிருந்தால், இதுக்குள் என்னென்னவோ நடந்திருக்கனுமே! நாடி கல்லாட்டம் ஒடறது. பித்த நாடி தூக்கல்லே, எனக்கொண்ணும் தெரியலியே!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/69&oldid=1533298" இலிருந்து மீள்விக்கப்பட்டது