பக்கம்:பாற்கடல்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

லா. ச. ராமாமிருதம்


”உனக்கென்னடா தெரியும்! இப்போ லசுஷ்மி இங்கிருந்தால் உன்மாதிரி மசமசப்பாளா?”

”வாஸ்தவந்தான், லக்ஷமி அம்மா நாடி பிடிக்கிறதிலே வரப்ரசாதி. ஆனால் அவா இப்போ இங்கே இல்லே. நீங்க வாளாடிக்கே நடந்தே போய் அவளைப் பிடிக்கச் சொல்லிக் கேட்டுக்கலாம்.”

“ஒஹோ! அதிகப்ரஸங்கம் வேறயா? விஷய சூன்யமானாலும்!”

விசுவநாதன் செட்டியென்ன எல்லாருமே கேட்டுப்பார்கள் அந்தநாள் அப்படி.

இதற்குள் மன்னி, செருப்பில் தைத்துக்கொண்டிருந்த சப்பாத்தி முள்ளைப் பிடுங்கி, பணிவுடன் நீட்டுவாள்.

”சரி, சரி உள்ளே போ! இதென்ன சதிர்க் கூடமா ?”

மன்னி உன்னுடைய நட்சத்திரப் பதவி, தாத்தாவை விட உயர்ந்ததாய் இருக்கணும்; ஆனால் நீ அங்கு இருக்கமாட்டாய். தாத்தா காலடியில் இடம் தேடியிருப்பாய். அங்கு போயும் உன் தலையெழுத்து அப்படி,

தாத்தாவை நினைக்கும் அதே மூச்சில் ஐயாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை. தாத்தாவுக்கு மூத்தவர். குணாதிசயங்களில் தாத்தாவுக்கு நேர் எதிர். பயம் என்றால் வீசை விலையென்ன?

அவரும் நள்ளிரவில் போயிருக்கிறார். சினிமாக் கொட்டகையிலிருந்து நண்பர்களுடன் திரும்பி வருகையில், பாதை குறுக்கே விழுந்து கிடந்த பழுதையை மிதித்து, அது நொடியில் காலில் நாலு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/70&oldid=1533299" இலிருந்து மீள்விக்கப்பட்டது